- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் மாநாடு 2 படம் குறித்த வெறித்தனமான அப்டேட்… எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

விரைவில் மாநாடு 2 படம் குறித்த வெறித்தனமான அப்டேட்… எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் உன்னை சரணடைந்தேன் சிவகாசி ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிப்பில் பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்காத நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அவர் இயக்கிய முதல் படம் சென்னை 28 மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து சரோஜா கோவா மாசு என்கிற மாசிலாமணி மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட்பிரபு முன்னணி இயக்குனராக மாறினார். இதில் அஜீத்குமாரின் 50வது படமாக மங்காத்தா மாஸ் ஹிட் படமாக இருந்தது. வெங்கட்பிரபுவுக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தந்தது. ஆனால் மங்காத்தா 2 படம் ஏனோ உருவாகவில்லை.

பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. கடந்த 2021ம் ஆண்டில் வெளியான சிம்பு எஸ்ஜே சூர்யா கல்யாணி பிரியதர்ஷன் கருணாகரன் எஸ்ஏ சந்திரசேகர் பிரேம்ஜி வாகை சந்திரசேகர் ஒய்ஜி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டைம் டிராவல் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. போலீஸ் அதிகாரி கேரக்டரில் எஸ்ஜே சூர்யா பேசிய தலைவரே தலைவரே வசனம் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. இந்த படம் நடிகர் சிம்புவுக்கு கம்பேக் படமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க கமிட் ஆகியிருக்கிறார். அதற்கான ஸ்டோரி டிஸ்கசன் கடந்த ஒரு மாதமாக இலங்கையில் நடந்து வரும் நிலையில், இப்போது புதிய தகவலாக நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்க கமிட் ஆன தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் இப்போது மதராஸி பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதனால் சிம்பு நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்கும் நிலையில், இது மாநாடு 2 படமாக தான் உருவாகும் என்றும், அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்