தமிழ் சினிமாவில் எப்போதுமே திகில் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காதல் காமெடி கவர்ச்சி சென்டிமென்ட் ஜானரில் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர் சி கூட அவ்வப்போது அரண்மனை சீரிஸ்சில் திகில் திரில்லர் படங்களை தந்து ஜெயித்து வருகிறார். அரண்மனை 4 வரை வெளியான நிலையில், அரண்மனை 10 வரை கூட தருவேன் என்றும் சுந்தர் சி உறுதியாக கூறியிருக்கிறார்.
அதே போல் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சும் திகில் திரில் படங்களை காஞ்சனா சீரிஸ்சில் காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 படங்களை தொடர்ந்து இப்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பேய் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் டிமாண்டி காலனி. இந்த படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாக பெரிய வெற்றியை பெற்றது. இதில் அருள்நிதி நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து 2024ம் ஆண்டில் டிமாண்டி காலனி 2ம் பாகம் வெளியானது. இதில் அருள்நிதி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதுவரை இவர் ராசியில்லாத நடிகை என ஒரு மோசமான சென்டிமென்ட் இருந்த நிலையில், இந்த படத்தில் அதை அடித்து நொறுக்கி விட்டு மிகப்பெரிய வெற்றியை அவர் கொடுத்திருந்தார். இந்த படத்தில் அருள்நிதியை காட்டிலும் அதிகளவில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியது பிரியா பவானி சங்கர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து டிமாண்டி காலனி 3 படம் உருவாகிறது. அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை ஏற்கனவே இயக்குனர் அஜய் ஞானமுத்து துவங்கி விட்டார். ஆனால் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில்தான் இந்த டிமாண்டி காலனி 3 படம் உருவாகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் எதுவும் இதுவரை முன்வரவில்லை.
இதற்கிடையே இந்த படத்துக்கு அஜய் ஞானமுத்து சம்பளம் ரூ. 15 கோடி மற்றும் பிராப்பர்டி ஷேர் அவர் கேட்டிருக்கிறார். அதனால் இந்த படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் அஜய் ஞானமுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது திமுக குடும்பம் சார்ந்த அருள்நிதி நடிக்கும் படம் என்பதால், சன் பிக்சர்ஸ் ஓகே சொல்லவும் அதிக வாய்ப்புள்ளது.





