- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் ரசிகர்களை பெரிதாக நம்பினேன்… தனுஷ் நடிப்புக்கு பெரிய வரவேற்பை எதிர்பார்த்தேன் - குபேரா படம்...

தமிழ் ரசிகர்களை பெரிதாக நம்பினேன்… தனுஷ் நடிப்புக்கு பெரிய வரவேற்பை எதிர்பார்த்தேன் – குபேரா படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் சேகர் கம்முலா!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சேகர் கம்முலா. அவரது இயக்கத்தின் கடந்த 20ம் தேதி குபேரா படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக குபேரா படம் உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் குபேரா படம் தெலுங்கில் மட்டுமே பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. மற்ற மொழிகளில் குறிப்பாக தமிழில் உபேரா படத்திற்கு கிடைத்த மோசமான வரவேற்பு படக்குழுவினருக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. தனுஷின் 5வது 100 கோடி வசூல் சாதனை படம் குபேரா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுவரை தனுஷ் நடித்த படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த 5 படங்களில் குபேரா படமும் ஒன்று. ஆனால் சுமார் 18 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்தில் குபேரா படத்துக்கு வசூலாகி உள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 55 கோடி ரூபாய், கர்நாடகாவில் 8 கோடி ரூபாய், இந்தியில் 2 கோடி ரூபாய் கேரளாவில் ஒரு கோடி ரூபாய் வெளிநாடுகளில் 28 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளிலும் குபேரா படத்தை உரிய விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை என்பது ரசிகர்களின் குமுறலாக உள்ளது. தமிழில் 100 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்திருக்கலாம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பலரது கருத்தாக உள்ளது. தனுஷ் நாகார்ஜூனா ராஷ்மிகா ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். அதனால் அங்கும் இந்த படம் இன்னும் நிறையவே வசூல் செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் சேகர் கம்முலா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது சேகர் கம்முலா கூறுகையில், தமிழ் ரசிகர்களிடம் குபேரா படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று நான் நம்பினேன். அவர்களின் உணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டுதான் படத்தில் பல அம்சங்களை நாங்கள் வடிவமைத்தோம்.

படத்தின் நாயகனாக தனுஷ் நடித்ததால், அவர்களிடம் அந்த உணர்வு வலுவாக இணையும் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முடிவு எதிர்பாராதது என்று இயக்குனர் சேகர் கம்முலா வருத்தத்துடன் கூறியிருக்கிறார். குபேரா படத்துக்கு பின் நடிகர் தனுஷ் இப்போது போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். வருகிற ஜூலை 15ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

- Advertisement -

சற்று முன்