- Advertisement -
Homeபொழுதுபோக்கு300 ரூபா கொடுத்து லாரியில் ஏத்தி அனுப்பிச்சா எங்கம்மா, நல்லா இருய்யா என்று கும்பிடுவேன் -...

300 ரூபா கொடுத்து லாரியில் ஏத்தி அனுப்பிச்சா எங்கம்மா, நல்லா இருய்யா என்று கும்பிடுவேன் – தனது வெற்றி குறித்து பேசிய இயக்குனர் பாரதிராஜா!

- Advertisement -

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று பழமொழி சொல்வார்கள். அதே போல் கல்லை கூட நடிக்க வைத்து விடுவார் என்று தமிழ் சினிமாவில் ஒரு பொன்மொழி சொல்வார்கள். பாரதிராஜா நடிப்பதை பார்த்து அவர் சொல்லி கொடுப்பதில் 10 சதவீதம் செய்துவிட்டாலே உனக்கு நல்ல நடிகன் என்ற பெயர் கிடைத்து விடும் என்றும் தமிழ் சினிமாத்துறை சார்ந்த பலர் கூறுவதுண்டு.

இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்பட்ட பாரதிராஜா இன்று நம்மிடையே இல்லை. 3 தினங்களுக்கு முன்புதான் இந்த மண்ணுலகை விட்டு அவர் மறைந்தார். ஆனால் அவரது படைப்புகள் என்றென்றும் மறையாமல் மக்களின் மனங்களில் நின்று பேசும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாரதிராஜா போன்ற படைப்பாளிகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது, கண்ணாடியில் உங்க முகத்தை நன்றாக பாருங்கள். இன்னொரு ஜென்மத்தில் இது கிடைக்காது. ஒரு ஜென்மம்தான். அது சின்ன மூக்கா சின்ன கண்ணா சின்ன காதா? எதுவும் இல்லே. பாரதிராஜா நான் வெச்சுக்கிட்ட பேரு. என் பேரு பால்பாண்டி. ஒரிஜினல் நேம் பால் பாண்டி. சர்டிபிகேட்டுல சின்னசாமி.

பாரதிராஜா என்பது நான் வெச்சுக்கிட்ட பேர். பாரதிங்கறது என்னோட சிஸ்டர் பேர். என் தம்பி ஜெயராஜ்ல இருந்து ராஜாவை எடுத்து பாரதிராஜான்னு எனக்கு பேர் வைச்சுக்கிட்டேன். இன்னைக்கும் கண்ணாடியில் பார்க்கும் போது தலை சீவும்போது நெனைச்சுக்குவேன். வாட் ஏ மேன். என்ஜாய் மை செல்ப்.

- Advertisement -

ச்சே நல்லா இருக்கேன். நல்லா இருய்யா நீன்னு கையெடுத்து கண்ணாடியை பார்த்து கும்பிடுவேன். இன்னொரு ஜென்மம் கிடையாதுய்யா. ஒரு ஜென்மம்தான். கடவுள் எவ்வளவு நல்லது செய்திருக்கிறார். 300 ரூபாயோட ஊர்ல இருந்து வந்தே. கடவுள் எவ்வளவு பெரிய விஷயம் கொடுத்திருக்கிறார் என்று கும்பிடுவேன்.

ஏன்னா 300 ரூபா கொடுத்து லாரியில் ஏத்தி அனுப்பிச்சா எங்கம்மா. இன்னைக்கு இப்படி உட்கார்ந்திருக்கேன். ஆனால் எனக்குள்ள ஏதோ ஒரு பவர் இருக்கு இல்லையா? அதனால் நானும் என்னை லவ் பண்றேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாரதிராஜா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்