நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த ஆண்டில் வெளியான அவரது விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அடுத்து வெளியான குட் பேட் அக்லி மாஸ் ஹிட் படமாக அவருக்கு அமைந்து விட்டது. குறிப்பாக அஜீத்குமாரின் பழைய படங்களை ரெபரென்ஸ் வைத்தே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களை அசத்தி விட்டார்.
இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அஜீத்குமார் தந்திருக்கிறார். ஏகே 64 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் துவங்க இருக்கிறது. ஏனெனில் கடந்த 6 மாதங்களாக கார் ரேஸில் வெளிநாடுகளில் பிஸியாக இருக்கும் அஜீத்குமார், வரும் அக்டோபர் மாத இறுதியில்தான் கார் ரேஸை முடித்துவிட்டு சென்னை திரும்ப உள்ளார்.
முன்பெல்லாம் நடிகர் அஜீத்குமார் நேர்காணல் பேட்டிகள் பொது நிகழ்ச்சிகள் என கலந்துக்கொண்டு சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பேசும் விஷயங்கள் அவருக்கு எதிரானதாக மாறி, அவரது இமேஜை டேமேஜ் செய்த நிலையில், பொதுவெளியில் பேசுவதை தவிர்த்தார். நேர்காணல்கள் சினிமா நிகழ்ச்சிகள் விருது விழாக்கள் எதிலும் அவர் பல ஆண்டுகளாக கலந்துக்கொள்வது இல்லை.
குறிப்பாக துக்க நிகழ்வுகளுக்கு கூட அஜீத்குமார் நேரில் வருவது இல்லை. அவர் நடித்த படங்களுக்கு கூட அவர் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது இல்லை. ஆனாலும் அஜீத்குமார் நடிக்கும் படங்களை இயக்க, தயாரிக்க கூட்டம் அலைமோதுகிறது. அவரது படங்களை காண ரசிகர்கள் தவம் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீபமாக அஜீத்குமார் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. கார் ரேஸ்களுக்கு இடையே வெளிநாட்டு ஊடகங்களை சந்திக்கும் அஜீத்குமார், ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை கூறி வருகிறார். சந்தோஷமா இருங்க, ஆரோக்கியமா உடம்பை பார்த்துக்குங்க. குடும்பத்தை பாருங்க. ரசிகர்களுக்குள் சண்டை போட்டுக்காதீங்க என்றெல்லாம் பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஏகேவின் அடுத்த படங்களை இயக்க விரும்பி அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றை அஜீத்குமார் கூறியிருக்கிறார். எனது படங்களில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வது போன்ற காட்சிகள் இனி அவசியம் இடம்பெற வேண்டும். ஆனால் அது அட்வைஸ் போல தெரியக்கூடாது. நேரடியாக கருத்து சொன்னால் அது பிடிக்காது. அதனால் தேனில் மருந்து கலந்து கொடுப்பது போல் அந்த காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





