- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷூக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நடிகை - சூர்யா பட நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்திய...

தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நடிகை – சூர்யா பட நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்திய படக்குழு – குபேரா படம் தந்த பாடமோ?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய இந்த படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. குறிப்பாக தெலுங்கில் இந்த படம் மாஸ் ஹிட் வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழில் இந்த படம் சரியாக போகவில்லை.

மொத்தமாக 17 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து குபேரா படம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு முன் கடந்த பிப்ரவரி 22ம் தேதி தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் ரூ. 13 கோடி செலவில் உருவானது. ஆனால் இந்த படம் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது. தனுஷின் அக்கா மகன் பவிஷ் இதில் நாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் இட்லி கடை படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். ராஜ்கிரண் சத்யராஜ் அருண்விஜய் போன்றவர்கள் நடித்துள்ளனர். அதே போல் தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படம் ஒன்றில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். அந்த படமும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். வருகிற 15ம் தேதிக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார்.

- Advertisement -

தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டிராகன் பட நடிகை கயாடு லோஹர் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவரிடம் பேசி சம்மதம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், இப்போது தனுஷ் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. கால்ஷீட் இல்லை என்பதால் அவர் நோ சொல்லிவிட்டார் என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

இதையடுத்து தற்போது நடிகை பூஜா ஹெக்டேவிடம் தனுஷூக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அவரும் ஓகே சொல்லிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. பீஸ்ட் ரெட்ரோ படங்களில் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அவர் அடுத்தாக தனுஷூடன் ஜோடியாக நடிக்கிறார். குபேரா படம் தந்த தோல்வியால், கயாடு லோஹர் தனுஷூடன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்