- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் அருகில் நெருக்கமான நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட யோகிபாபு - அந்த விஷயத்துக்கு பதில் தந்துவிட்டாரா?...

அஜீத்குமார் அருகில் நெருக்கமான நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட யோகிபாபு – அந்த விஷயத்துக்கு பதில் தந்துவிட்டாரா? இணையத்தில் வைரல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு. நடிகர்கள் வடிவேலு, சந்தானம், சூரி போன்றவர்கள் ஹீரோ நடிகர்களாக மாறிய பிறகு, காமெடி நடிகர் பஞ்சம் தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடுகிறது. அதனால் காமெடி இல்லாமல் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதனால் சிரிப்பே வராவிட்டாலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸி போன்ற நடிகர்களை காமெடி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கின்றனர்.
அவர்கள் நடிக்கும் காட்சிகளில் சிரிப்பும் இல்லை. ரசிகர்களுக்கு காமெடியும் இல்லை என்றாலும் வேறு வழியின்றி அவர்களை நடிக்க வைக்கின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை வெடித்தது. வலிமை படத்தில் யோகிபாபு நடித்த போது, அவர் அஜீத்குமாரை தொட்டு பேசியதாகவும் அப்போது அவர் என்னை தொட்டெல்லாம் பேசக் கூடாது என்று எச்சரித்ததாகவும், அதனால் அந்த படத்தில் இருந்தே யோகிபாபு விலகியதாகவும் ஒரு தகவல் பரவியது.

இந்த விஷயத்தை நடிகர் யோகிபாபுவே சிலரை அழைத்து கூறியதாகவும் அந்த தகவல் வைரலாக பரவியது. ஆனால் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்றே சிலர் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தவறான வதந்திகளை பரப்புகின்றனர் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் எங்களிடம் சொன்னது 100 சதவீதம் உண்மை என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதியாக கூறியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். பிரசன்னா, அர்ஜூன் தாஸ் போன்றவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அஜீத்குமார் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து இப்போது நடிகர் யோகிபாபு நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜீத்குமாருடன் நெருக்கமாக நிற்கும் ஒரு புகைப்படத்தை நடிகர் யோகிபாபு எடுத்துள்ளார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, அன்று வந்த விமர்சனத்துக்கும், சர்ச்சைக்கும் இதன்மூலம் யோகிபாபு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்