- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சென்டிமென்ட் இந்த படத்திலும் தொடர்கிறதா? - அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை...

அந்த சென்டிமென்ட் இந்த படத்திலும் தொடர்கிறதா? – அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் இணைந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

- Advertisement -

தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா தமிழில் சுல்தான் வாரிசு குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த 3 படங்களுமே தமிழில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்தியில் அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனா தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் அவர் காட்டிய தாராளத்தை பார்த்து பாலிவுட் ரசிகர்களே மிரண்டு போய்விட்டனர். அதனால் இந்தியிலும் ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

- Advertisement -

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த கீதாகோவிந்தம் படம்தான் அவருக்கு நல்ல அறிமுகத்ததை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா புஷ்பா 2 படங்களில் நாயகியாக நடித்த பிறகுதான் ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய நடிகையாக மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கும் சயன்டிபிக்சன் படத்தில் நாயகனாக அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இதில் 2 அல்லது 3 வேடங்களில் அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தீபிகா படுகோனே பாக்யஸ்ரீ போர்ஸ் ஜான்வி கபூர் மிர்ணாள் தாகூர் ஆகியோருடன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ராஷ்மிகா மந்தனாவும் நடிப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. புஷ்பா 400 கோடி ரூபாய், புஷ்பா 2 படம் 1800 கோடி ரூபாய் வசூலித்தது. அந்த சென்டிமென்ட் காரணமாக மீண்டும் அல்லு அர்ஜூன் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஆனால் அவர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா இல்லையா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி, அட்லி சம்பளம் ரூ. 100 கோடி என்றும் சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிக்கும் 22வது படம் இது. புஷ்பா புஷ்பா 2 படங்களை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் இந்த படத்திலும் ராஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்