- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவும் இல்லே, விக்ரமும் இல்லே, துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான் -...

சூர்யாவும் இல்லே, விக்ரமும் இல்லே, துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான் – டைரக்டர் கவுதம் மேனன் சொன்ன புதிய தகவல்

- Advertisement -

ஒரு படத்தில், வரும்… ஆனா வராது என்று வடிவேலுவிடம் என்னத்தே கண்ணையா பேசிய வசனம் போல தான், நீண்ட நாட்களாக இந்த படம் குறித்தும் தமிழ் சினிமாவில் பேசப்படுகிறது. அது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம்தான். பல ஆண்டுகளாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் கவுதம் மேனன் பகீரத முயற்சி செய்தும் அந்த படம் ரிலீஸ் இதுவரை ஆகவில்லை.

கவுதம் மேனன் படங்கள் என்றாலே, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருக்கும். ஆனால் அவரது இயக்கத்தில் இந்த படம் ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பது, பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த படம் பணப்பிரச்னையில் சிக்கியுள்ளதால், படத்தை வெளியிடுவதில் கவுதம் மேனனுக்கு பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கிறது.

- Advertisement -

கவுதம் மேனன் மிகச்சிறந்த இயக்குனராக தன்னை வெளிப்படுத்திய திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா. மெல்லிய காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய இந்த படம் பல ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் அமோக ஆதரவை பெற்று பல வாரங்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே போல் வேட்டையாடு விளையாடு படமும் கவுதம் மேனனின் மற்றொரு மைல் கல்லாக இருக்கிறது. அடுத்து வாரணம் ஆயிரம் படமும், இன்றும் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறது ஒரு படமாக இருக்கிறது.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் கவுதம் மேனன் பல படங்களில் நடித்து அசத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் நடிகராக இருப்பதை விட இயக்குனராக செயல்பட்டால் தமிழ் சினிமாவுக்கு இன்னும் பல நல்ல படங்கள் கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை கிளம்பிய நிலையில், சமீபத்தில் இனிமேல் நடிப்பை காட்டிலும் படம் டைரக்ட் செய்வதில் ஆர்வம் காட்ட இருப்பதாக கவுதம் மேனன் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குனர் கவுதம் மேனனே கூறியிருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான். ஆனால் இந்த படத்தின் மீது சூர்யாவுக்கு போதிய உடன்பாடு இல்லாததால் நடிக்க மறுத்து விட்டார். அதன்பிறகுதான் விக்ரம் நடித்தார்.

தயாரிப்பாளர் தாணு ஒருமுறை என்னை அழைத்து, ரஜினிகாந்துக்கு ஒரு நல்ல கதை இருந்தால் சொல்லுங்க என்றார். அப்போது ரஜினிக்கு, துருவ நட்சத்திரம் கதையை சொன்ன போது, கதை பிடித்துப்போய் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆனால், இப்போது இந்த படம் பண்ணவில்லை. கபாலி படத்தில்தான் ரஜினி நடிக்கிறார் என்று தாணு கூறிவிட்டார் என, அந்த நேர்காணலில் கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்