- Advertisement -
Homeபொழுதுபோக்குபா ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்த துயர சம்பவம்... கண்கலங்கி நிற்கும் திரையுலகம்...

பா ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்த துயர சம்பவம்… கண்கலங்கி நிற்கும் திரையுலகம்…

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தங்கலான். விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டு கலவையான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக படத்தின் வசனங்கள் புரியவே இல்லை என்பதுதான் பலரின் குறையாக இருந்தது. விமர்சன ரீதியாகவும் இரண்டாம் பாதி அந்த அளவுக்கு சரியாக இல்லை என்று பலரும் கூறினர்.

விக்ரம் இந்த திரைப்படத்திற்காக கெட்டப்களை மாற்றி பெரிய அளவில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தாலும் அது வழக்கம்போல எடுபடாமல் போய்விட்டதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர். இப்படியான சூழலில், பா ரஞ்சித் அடுத்ததாக சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இருப்பதாக இருந்தது.

- Advertisement -

தற்போது அந்தத் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு வேட்டுவம் திரைப்படத்தை எடுத்து வருகிறார் ரஞ்சித். அட்டகத்தி தினேஷ் மற்றும் ஆர்யா என இருவர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஆர்யாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்திய படக்குழு தற்போது நாகை மாவட்டத்திற்கு சென்றிருக்கிறது. அங்கு விழுந்தம்மாவடி என்னும் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, சண்டை பயிற்சி கலைஞர் ராஜு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் ஸ்டண்ட் தொடர்பான காட்சியில் பணியாற்றும்போது ராஜு உடல் நலம் குன்றியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

உடனடியாக நாகை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது ஏற்கனவே ராஜு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த செய்தி திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆர்யா படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சி கலைஞர் ராஜு உயிரிழந்து விட்டார் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும், அவரது இறப்பால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு கடவுள் மேலும் வலிமையை கொடுக்கட்டும் எனவும் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் திரைத்துறையை சேர்ந்த பலரும் ராஜு குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்