- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜூன் நடிக்கும் அட்லி படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா? - வேற...

அல்லு அர்ஜூன் நடிக்கும் அட்லி படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா? – வேற லெவல் சம்பவம்தான் போங்க…

- Advertisement -

சினிமாவில் சில ஜோடிகள் தொடர்ந்து சேர்ந்து நடித்தால் அந்த படங்கள் மாஸ் ஹிட் ஆனால் அவர்களை ராசியான ஜோடி என்பார்கள். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா சிவாஜி கேஆர் விஜயா பிரபு குஷ்பு, கார்த்திக் ரேவதி, ரஜினி அம்பிகா கமல் ஸ்ரீதேவி விஜயகாந்த் ராதிகா போன்றவர்களை அப்படி ராசியான ஜோடியாக ரசிகர்கள் சொன்னதுண்டு.

இப்போது ராசியான ஜோடி என்பதற்கு பதிலாக பல படங்களில் இணைந்து நடித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை தரும் ஜோடிகளை, அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்று சொல்வது டிரண்டிங் ஆக உள்ளது. அந்த வகையில் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா ஜோடியை கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன ஜோடியாக சினிமாவில் பார்க்கின்றனர்.

- Advertisement -

புஷ்பா புஷ்பா 2 படங்களில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். புஷ்பாவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகாவும் புஷ்பா படத்தில் காதலன் காதலியாகவும் புஷ்பா 2 கணவன், மனைவியாகவும் வாழ்ந்து காட்டியிருந்தனர். இந்த 2 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.

இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்குனர் அட்லி தனது 6வது படமாக, அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இது அல்லு அர்ஜூனுக்கு 22வது படமாகும். இதில் அட்லி சம்பளம் ரூ. 100 கோடி என்றும், அல்லு அர்ஜூன் சம்பளம் 250 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை 2000 கோடி ரூபாய் வசூல் இலக்குடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

விஞ்ஞானபூர்வமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நாயகனாகவும் தீபிகா படுகோனே மிர்ணாள் தாகூர் ஜான்விகபூர் பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் ராஷ்மிகா மந்தனா என 5 பேர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் வில்ஸ் மித் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நெகட்டிவ் ரோலில் அதாவது வில்லி கேரக்டரில் நடிப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதுவும் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் போல ஹீரோவை எதிர்த்து அட்ராசிட்டி செய்யும் ஒரு பவர்புல் கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை நேஷனல் கிரஷ் ஆக தன் கவர்ச்சியான அழகால், காதல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா, இனி வில்லியாக மிரட்டப் போகிறாரா என அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்