- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் ஹிட் ஆகாததற்கு கிளைமாக்ஸ்தான் காரணம் - தோல்வியடைந்த கமல் படம் குறித்து வெளிப்படையாக...

அந்த படம் ஹிட் ஆகாததற்கு கிளைமாக்ஸ்தான் காரணம் – தோல்வியடைந்த கமல் படம் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். அவர் இயக்கிய ஆரம்பகால படங்கள் புத்தம் புது பயணம் சேரன் பாண்டியன் உள்ளிட்ட சில படங்களில் அவரே வில்லனாகவும் நடித்திருக்கிறார். நல்ல கதையம்சம் படங்களை கேஎஸ் ரவிக்குமார் தந்திருக்கிறார். அவரது படங்கள் என்றாலே ரசிகர்களை வெகுவாக கவரும் ஜனரஞ்சகமாக கதையில் உருவாகி இருக்கும்.

குறிப்பாக நாட்டாமை நட்புக்காக முத்து தெனாலி பஞ்சதந்திரம் அவ்வை சண்முகி மன்மதன் அம்பு பாட்டாளி தசாவதாரம் சமுத்திரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கேஎஸ் ரவிக்குமார் தந்திருக்கிறார். இதில் குடும்பம் சென்டிமென்ட் நட்பு காதல் காமெடி இசை பாடல்கள் என அனைத்திலும் ரசிகர்களின் மனதை கவரும் விதமாக தந்திருப்பார்.

- Advertisement -

சமீபகாலமாக கேஎஸ் ரவிக்குமார் படங்களை இயக்குவதை குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் சரத்குமார் போன்றவர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார். இயக்குனராகவும் நடிகராகவும் மட்டுமின்றி சில படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார்.

இப்போது வரும் படங்களில் போலீஸ் டாக்டர் அப்பா அண்ணன் போன்ற குணச்சித்திர கேரக்டர்களில் கேஎஸ் ரவிக்குமார் நடித்து வருகிறார். இயக்குனர்கள் வரிசையில் நடிகரானவர்களில் கேஎஸ் ரவிக்குமாரும் ஒருவர். இப்போது அவரும் மகனும் நடிக்க வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, நான் இயக்கிய முதல் காதல் திரைப்படமே மன்மதன் அம்பு படம் தான். அந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி நான் இயக்கியிருந்தேன். இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியவை கமல்ஹாசனுடையது.

அந்த படத்தின் கிளைமாக்ஸ் தவிர மற்ற அனைத்தும் இன்றைக்கும் கூட ரசிக்கும் வகையில் இருப்பதாக பலர் கூறுகின்றனர். கிளைமாக்ஸ் மட்டும் அந்த படத்திற்கு பொருத்தமாக இல்லை. மற்றபடி நல்ல நகைச்சுவையும் அந்த படத்தில் இருந்தது. பஞ்சதந்திரம் தெனாலி போன்ற படங்களின் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய படம் மன்மதன். ஆனால் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது என்று கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்