- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தியின் சிவகார்த்திகேயன், ரவி மோகன் கதாபாத்திரத்தை புட்டு புட்டு வைத்த சுதா கொங்கரா... படத்திலிருந்து நடந்திருக்கிற...

பராசக்தியின் சிவகார்த்திகேயன், ரவி மோகன் கதாபாத்திரத்தை புட்டு புட்டு வைத்த சுதா கொங்கரா… படத்திலிருந்து நடந்திருக்கிற இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா…

- Advertisement -

இயக்குனர் மணிரத்தினமிடம் உதவியாளராக இருந்தவர்தான் சுதா கொங்கரா. அங்கிருந்து சினிமா பயின்ற அவர் துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்த இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. பலருக்கும் இந்த திரைப்படம் வெளிவந்தது கூட தெரியாது. இப்படி சுதாவுக்கு முதல் திரைப்படமே மிகவும் மோசமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து நீண்ட காலம் காத்திருந்த அவர், இறுதிச்சுற்று மூலம் தனது இரண்டாவது திரைப்படத்தை கொடுத்தார். மாதவன், ரித்திகா சிங், ராதாரவி, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் பலரது பார்வையும் சுதா கொங்கரா மீது திரும்பியது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை அவர் இயக்கினார். உண்மைக் கதையை தழுவி அவர் எடுத்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூர்யாவுக்கும் பெரும் திருப்புமுனையை கொடுத்த திரைப்படமாக இது அமைந்தது. இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாதது மட்டுமே இதன் குறையாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் மீண்டும் சுதா கை கோர்த்தார். படத்திற்கு புறநானூறு என்ற டைட்டில் வைக்கப்பட்டது. துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா நசீம் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட, அதே கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி படப்பிடிப்புக்கு சென்றார் சுதா.

இதில் ரவி மோகன் வில்லனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுபோக அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் இடம் பெற்றனர். படத்திற்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட, சென்னை காரைக்குடி சிதம்பரம் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடத்தப்பட்டது. நடுவே தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது பொள்ளாச்சியில் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கும் சுதா, இந்தக் கதைக்கு சிவகார்த்திகேயன் ஃபிட்டாகி இருக்கிறார். மிகவும் நேர்மையுடன் அவர் நாள்தோறும் அணுகி வருகிறார். பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் அவருக்கு இந்த திரைப்படம் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ரவி மோகன் கதாபாத்திரத்தை பார்க்கும்போது நானே என்ன செய்கிறேன் என்று கேள்வி வருகிறது. அந்த அளவுக்கு நிஜ வாழ்க்கையிலும் படத்தில் இருக்கும் கதாபாத்திரமும் வேறு வேறாக இருக்கும். ஜனநாயகன் திரைப்படத்துடன் பராசக்தி பொங்கலுக்கு மோதுவதாக கூறுவது பற்றி எனக்கு தெரியாது அதனை தயாரிப்பு நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்