தமிழ் சினிமாவில் தனது படைப்புகளால் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் வெற்றிமாறன். அவரது ஒவ்வொரு திரைப்படமும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க, அவரை தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்கள் வெற்றிமாறனை தொடர்ந்து பின் தொடர்கின்றனர். தான் சொல்ல வந்த விஷயத்தை, எந்தவித சமரசமும் இல்லாமல் திரைக்கதையில் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் இன்று வரை வெற்றிமாறன் வெற்றி அடைந்து வருகிறார்.
பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கி சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் வரை அவரது படங்களுக்கு என தனி மார்க்கெட் இங்கு உள்ளது. தனுசை வைத்து மட்டும் நான்கு திரைப்படங்களை அவர் இதுவரை இயக்கியிருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என 4 திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தன.
குறிப்பாக ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தேசிய விருதை பெற்றன. இப்படியான சூழலில் தற்போது அவர் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதன் முந்தைய பாகத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதில் விஜய் சேதுபதியை விடவும் சூரிக்கு படத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. படத்தின் தொடக்கத்தின் முதல் இறுதி வரை குமரேசன் கதாபாத்திரத்தில் வாழ்ந்த அவர், தனது நகைச்சுவைக்கு மூட்டை கட்டி விட்டு ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக நடித்து பாராட்டைப் பெற்றார். இப்படியான சூழலில் அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் வெற்றிமாறன் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் சமீப நாட்களாக நடிகை ஆன்ட்ரியா உடன் நெருக்கமான நட்பில் இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் சிலர் பேசி வருகின்றனர். வடசென்னை திரைப்படத்தில் சந்திரா என்னும் அழுத்தமான கதாபாத்திரத்தில் ஆன்ட்ரியா நடித்திருந்தார். அப்போது முதலில் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் கம்பெனி நிறுவனம் சார்பில் கவின் நடிக்கும் திரைப்படமும் ஆன்ட்ரியா ஏற்பாட்டிலேயே நடப்பதாக கூறப்படுகிறது. தனது தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக விவகாரத்திலும், கதை கேட்பதிலும் ஆன்ட்ரியாவுக்கு வெற்றிமாறன் முன்னுரிமை கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அறிந்த சினிமா விமர்சகர்கள், இருவருக்குள்ளும் இப்படி ஒரு நட்பா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





