- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தின் ஆடியோ ரிலீஸ்… இந்த முறை தமிழ்நாட்டில் இல்லை - ஏமாந்துபோன தளபதி ரசிகர்கள்!

ஜனநாயகன் படத்தின் ஆடியோ ரிலீஸ்… இந்த முறை தமிழ்நாட்டில் இல்லை – ஏமாந்துபோன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பிரியாமணி மமிதா பைஜூ கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பாபிதியோல் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி உள்ளார். அனிருத் ஜனநாயகன் படத்துக்கு இசையமைக்கிறார். வருகிற 2026ம் ஆண்டில் பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளுக்கான படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் இப்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக அரசும் போலீஸ் தரப்பும் கொடுத்த நெருக்கடிகளால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்தார். லியோ படத்துக்கு திமுக அரசு கொடுத்த நெருக்கடி தந்த அனுபவ பாடத்தால் இந்த படத்துக்கு இசை வெளியீட்டு விழாவே வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறிவிட்டார். அதனால் தி கோட் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவே நடத்தப்படவில்லை. படம் வெளியான பிறகு சில தினங்களுக்கு பிறகு சக்சஸ் மீட் என்று பெரிய விழாவாக நடத்தப்பட்டது.

- Advertisement -

இப்போது விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்தியே தீர வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினரும் உள்ளனர். ஆனால் சென்னையில் நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் அல்லது சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தால் திமுக அரசு நெருக்கடி தரும் என்பதால் வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற டிசம்பர் மாதம் மலேசியாவில் உள்ள புத்தரஹயா என்ற பிரபலமான இடத்தில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மலேசியா பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் நிறைந்த மையப்பகுதியாகும். மேலும் எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இங்குதான் நடந்துள்ளது. இப்போது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவும் இங்கு நடக்கிறது. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள்தான் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்