- Advertisement -
Homeபொழுதுபோக்குவாங்க சார் வாங்கன்னு கூப்பிட்டுட்டு இப்ப எதுக்கு அழுவறீங்க? - பிரபல நடிகரின் மனைவியை கண்டித்த...

வாங்க சார் வாங்கன்னு கூப்பிட்டுட்டு இப்ப எதுக்கு அழுவறீங்க? – பிரபல நடிகரின் மனைவியை கண்டித்த நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் பல படங்களில் நடனக்குழுவில் கூட்டத்தோடு நடனமாடிய அவர் பிறகு சில படங்களில் அடியாட்களில் ஒருவராக சண்டை காட்சிகளில் நடித்திருந்தார். அவரது திறமையை கவனித்த நடிகர் விஜயகாந்த், தனது 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார்.

சந்தனமர கடத்தல் மன்னன் வீரபத்ரன் கேரக்டரில் மன்சூர் அலிகான் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்த அவர் சில படங்களில் நாயகனாகவும் நடித்தார். சில படங்களை டைரக்ட் செய்தார். அவரே தயாரிப்பாளராக மாறி சில படங்களை தயாரித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் மன்சூர் அலிகான் இதுவரை நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் காமெடி நடிகர் கிங்காங் மகள் திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் நடிகர் கிங்காங் பல முன்னணி நட்சத்திரங்களை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்துக்கு வருமாறு அழைப்பிதழ் தந்து அழைப்பு விடுத்தார். இதில் அரசியல் தலைவர்கள் சிலர் நேரில் வருகை தந்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

நடிகர் விஷால் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொண்டார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற சிலரும் பங்கேற்றனர். அதன்பிறகு நடிகர்கள் சிவகார்த்திகேயன் பாண்டியராஜன் ஆகியோர் நடிகர் கிங்காங் வீட்டுக்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்களை வழங்கிச் சென்றனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, மன்னிச்சிக்கப்பா கிங்காங், மதுரையில் ஷூட்டிங் வந்து மாட்டிக்கிட்டேன். திருமணத்துக்கு வர முடியலே. சென்னைக்கு வந்தததும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

அதன்படி சொன்ன வாக்குறுதியை மறக்காமல் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னைக்கு வந்து சேர்ந்த நிலையில், நடிகர் கிங்காங் வீட்டுக்கு நேரில் வந்தார். கையில் மொய் கவருடன் வந்த அவரை காமெடி நடிகர் கிங்காங் வாசலில் நின்று வரவேற்றார். அப்போது, கிங்காங் மனைவி அழுவதை பார்த்த நடிகர் மன்சூர் அலிகான், வாங்க சார் வாங்கன்னு கூப்பிட்டுட்டு இப்ப எதுக்கு அழுவறீங்க என்று கேட்டார். அதற்கு கிங்காங், ஆனந்த கண்ணீர் சார் என்க, தலையை ஆட்டி சிரித்தபடியே மன்சூர் அலிகான் வீட்டுக்குள் வந்து மணமக்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்