- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட இயக்குனர் கனவை கலைத்ததே அவர்தான்... உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் மணிகண்டன்... என்னங்க இப்படி சொல்லிட்டாரு...

என்னோட இயக்குனர் கனவை கலைத்ததே அவர்தான்… உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் மணிகண்டன்… என்னங்க இப்படி சொல்லிட்டாரு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் மணிகண்டன். ஆரம்ப காலகட்டங்களில் குறும்படங்களில் நடித்து வந்த அவர், தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் முரளி என்னும் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.

இப்படி இருக்க மணிகண்டனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் விக்ரம் வேதா. அந்த திரைப்படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் இடம்பெற்ற அவர், பலராலும் கவனிக்கப்பட்டார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் வசனங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன.

- Advertisement -

பின்னாளில் இந்த வசனங்களை எழுதியது அந்த திரைப்படத்தில் நடித்த மணிகண்டன்தான் என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து காலா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த மணிகண்டனுக்கு, குட் நைட் திரைப்படம் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து அவரை ஹீரோவாக்கி அழகு பார்த்தது.

இங்கிருந்து கதாநாயகன் அந்தஸ்தில் தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் மணிகண்டன். குட் நைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அவர் நடித்த மூன்று திரைப்படங்களும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளன. அதிலும் குடும்பஸ்தன் திரைப்படம் கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது.

- Advertisement -

தொடர்ந்து நடுத்தர குடும்ப இளைஞனாகவே நடித்து வந்த மணிகண்டன், அடுத்ததாக சமூகம் சார்ந்த பிரச்சனையை பேசும் கதையை தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. நடுவே அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் அடிபட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் அது குறித்து மணிகண்டன் விவரித்துள்ளார்.

அதில், ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு நான் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. புஷ்கர் காயத்ரிதான் இதனை தயாரிப்பதாக இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில், உனக்கு ஜெய் பீம் வெற்றி பெற்றுவிட்டது. இனி இந்தப் பாதையிலேயே செல் என்று புஷ்கர் காயத்ரி கூறிவிட்டார். அவரால்தான் அது நின்று விட்டது. வரும் காலங்களில் நிச்சயம் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று கலகலப்பாக பேசினார்.

- Advertisement -

சற்று முன்