- Advertisement -
Homeபொழுதுபோக்குகாரில் ஏறச் சென்ற போது தடுமாறி கீழே விழுந்த நடிகர் விஜய்… தள்ளி விட்டது யார்?...

காரில் ஏறச் சென்ற போது தடுமாறி கீழே விழுந்த நடிகர் விஜய்… தள்ளி விட்டது யார்? அவரது கார் விபத்தில் சிக்கியது எப்படி? – ரசிகர்கள் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் விஜய் கடந்த 27ம் தேதி மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தனது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரேசகர் ஆகியோருடன் கலந்துக்கொண்டார். மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இந்த விழா மிக பிரமாண்டமாக நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் அட்லி நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நடிகர் விஜயை வாழ்த்திப் பேசினர். அனிருத் இசை நிகழ்ச்சி நடந்தது. ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச் வினோத் நடிகைகள் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

மலேசியாவில் விழாவை முடித்துக்கொண்ட நிலையில் நடிகர் விஜய் நேற்று 28ம் தேதி அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது அவரை காண விமான நிலையத்தில் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் திரண்டு இருந்தனர். விமான நிலையத்தை விட்டு தனது பாதுகாவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் காரை நோக்கி விஜய் வேகமாக நடந்து வந்தார்.

அப்போது காருக்கு மிக அருகில் வந்த போது கூட்டம் முண்டியடித்த நிலையில் கடும் நெரிசலில் விஜய் சிக்கிக்கொண்டார். அப்போது திடீரென நடிகர் விஜய் தடுமாறி காருக்கு அருகில் கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர் விஜயை பிடித்து தூக்கி விட அவர் சட்டென காருக்குள் ஏறிக்கொண்டார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.

- Advertisement -

இத்தனை பேர் பாதுகாப்பாக வந்தும் விஜய் தடுமாறி விழுந்தது எப்படி? அவரை திட்டமிட்டே தள்ளி விட்டு விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்ட கார் வெளியே வந்த போது, அங்கு ரிவர்ஸ் எடுத்துக்கொண்டிருந்த ஒரு கார், விஜய் சென்ற காரின் பின்பகுதியில் மோதியது.

இதில் விஜய் சென்ற காரின் பின்புறம் இண்டிகேட்டர் லைட் உடைந்து சேதமானது. எனினும் காருக்குள் இருந்த நடிகர் விஜய், அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விஜய் தடுமாறி கீழே விழுந்தது, அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது என அடுத்தடுத்த சம்பவங்களால் தளபதி ரசிகர்களும் டிவிகே கட்சியினரும் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

சற்று முன்