- Advertisement -
Homeபொழுதுபோக்குநடு ராத்திரியில் போதையில் கதவை தட்டிய அமலா பால், ஒழுங்கீனத்தின் மறு உருவம் அவர்தான்- ஓப்பனாக...

நடு ராத்திரியில் போதையில் கதவை தட்டிய அமலா பால், ஒழுங்கீனத்தின் மறு உருவம் அவர்தான்- ஓப்பனாக போட்டு உடைத்த பிரபலம்

- Advertisement -

இளைஞர்கள் பலரின் இதயங்களை கொள்ளையடித்த நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தனது மாநிறத்தாலும் காந்த கண்களாலும் ரசிகர்களை மயக்கி கட்டிப்போட்டவர் இவர். தமிழ், மலையாளம் போன்ற பல மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்த அமலா பால், 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்திற்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்தார் அமலா பால். ஆனால் திருமணத்திற்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லாமல் போனது. எனினும் சமீப காலமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். அதனை தொடர்ந்து அமலா பாலை குறித்த பல கிசுகிசுக்கள் வெளியானது.

- Advertisement -

அவரும் அந்த மூன்று எழுத்து நடிகரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அந்த நடிகரின் மாமனார் மிரட்டிய பிறகுதான் அமலா பால் அந்த மூன்றெழுத்து நடிகரிடமிருந்து விலகிக்கொண்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது.

இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அமலா பால் குறித்த அதிர்ச்சியான பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

ஏ.எல்.விஜய்க்கு மனைவியாக இருந்தபோது அமலா பால், மது அருந்திவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வருவாராம். அதே போல் ஒரு நடிகரிடம் இருந்து அவருக்கு அடிக்கடி ஃபோன் கால் வருமாம். ஏ.எல்.விஜய் நாட்டுக்கோட்டை செட்டியார் வம்சம் என்பதால் அமலா பால் போன்ற நடிகையை திருமணம் செய்ய ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் எதிர்ப்பு தெரிவித்தாராம்.

ஆனால் இருவரும் மிகத் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் அவர் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாராம். திருமணம் ஆன அமலா பால் ஒழுங்கீனமாக நடந்துகொண்டாராம். இதனால்தான் இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்து விவாகரத்து பெற்றார்களாம். இவ்வாறு அமலா பாலை குறித்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்