- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்தபோது, அதை எல்லாம் மறந்து விட்டேன், என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியலே -...

அந்த படத்தில் நடித்தபோது, அதை எல்லாம் மறந்து விட்டேன், என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியலே – நடிகை நித்யா மேனன் ஓபன்டாக்!

- Advertisement -

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நித்யாமேனன். இவர் தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மாலினி 22 பாளையங்கோட்டை ஓ காதல் கண்மணி திருச்சிற்றம்பலம் சைக்கோ காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல படங்களில் நித்யா மேனன் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்த பல நடிகைகள் திறமையான தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றிருக்கின்றனர். ராதா அம்பிகா ரேவதி நதியா ஊர்வசி துவங்கி இப்போது மீரா ஜாஸ்மின் கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளனர். அதில் சமீபத்திய வரவாக நடிகை நித்யா மேனனும் ஒருவராக இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யாமேனனுக்கு மத்திய அரசு, கடந்தாண்டில் சிறந்த நடிகை தேசிய விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த தலைவன் தலைவி என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவரது மனைவியாக நடிகை நித்யா மேனன் நடித்திருக்கிறார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. குடும்ப பின்னணியை மையமாகக் கொண்டு கணவன் மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்னைகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக ஆகாச வீரன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி நித்யாமேனன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மதுரையில் தலைவன் தலைவி படப்பிடிப்பு நடந்த போது நான் பரோட்டா சாப்பிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது என்னால் என் நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய பரோட்டாகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு வெளுத்துக் கட்டி விட்டேன். எத்தனை சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை.

பரோட்டா சாப்பிடுவது மட்டுமல்ல, புரோட்டா வீசவும் கல்லில் போட்டு எடுக்கவும் இந்த படத்தில் நடித்த போது நான் நன்றாக கற்றுக் கொண்டேன். படத்துக்காக மட்டுமல்ல, படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் நிறைய பராட்டோக்களை நான் சாப்பிட்டேன். டயட் பற்றி நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை என்று நடிகை நித்யா மேனன் ஓபனாக கூறியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்