கோவையை சேர்ந்தவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் முக்கிய விஜபிகள் இல்ல திருமணங்கள் விசேஷங்கள் விழாக்கள் என்றாலே அங்கு மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங்தான் இருக்கும். அந்தளவுக்கு சமையல் கலையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ் மெகந்தி சர்க்கஸ், பென்குவின் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியிலும் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, ஸ்ருதியை பிரிந்து அவர் இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால் இன்னும் சட்டப்படி விவாகரத்து வாங்கவில்லை.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டிலா என்பவர், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் பல மாதங்களுக்கு முன்பே திருமணமாகி விட்டதாகவும் இப்போது நான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு தகவலை தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்து, ரங்கராஜூடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இது இணையத்தில் வைரலானது.
ஆனால் இந்த பதிவை மாதம்பட்டி ரங்கராஜ் ஷேர் செய்யவில்லை. இதற்கு அவர் தரப்பில் இருந்து எந்த ரியாக்சனும் இதுவரை இல்லை. இந்நிலையில், ஜாய் கிறிஸ்டிலா, மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமணம், கர்ப்பம் போன்ற விஷயங்கள் அடங்கிய இந்த பதிவை வெளியிட காரணங்கள் என்ன என்பது குறித்து பல தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.
ஜாய் கிறிஸ்டிலா, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த மாதம்பட்டி ரங்கராஜூக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணி செய்த போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாகி மாறியது. ஆனால் திருமணம் வேண்டாம், சினிமாவில் இதுபோல் லிவிங் டு ரிலேஷன்சிப்பில் இருப்பது சகஜம்தானே, என்று ஜாய் கிறிஸ்டிலாவிடம் மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார். அத்துடன் தனக்கு இன்னும் முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகவில்லை என்றும் மறுத்திருக்கிறார்.
மேலும் சமீபகாலமாக ஜாய் கிறிஸ்டிலாவை நேரில் சந்திப்பதை தவிர்த்தும் போனில் அழைத்தால் பேசாமலும் இருந்திருக்கிறார். அவரது சில நெருங்கிய நண்பர்கள், மாதம்பட்டி ரங்கராஜ் கேரக்டர் இதுதான், சில பெண்களிடம் நெருங்கி பழகுவார். பிறகு விலகி விடுவார் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் அச்சமடைந்த ஜாய் கிறிஸ்டிலா, மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமணம் ஆனதை, கர்ப்பமாக இருப்பதை அவராகவே பொதுவெளியில் கொண்டு வந்திருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விடக்கூடாது என்பதுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.





