தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் முரளி. பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு சுந்தரா டிராவல்ஸ் என பல வெற்றி படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரது மகன் அதர்வா பாணா காத்தாடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தான் நடிகை சமந்தாவும் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாணா காத்தாடி படத்தை தொடர்ந்து பரதேசி ஈட்டி 100 கணிதன் சண்டிவீரன் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் அதர்வா நடித்திருக்கிறார். குறிப்பாக பரதேசி படத்தில் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் அதர்வா சிறந்த நடிகராக இருந்தும் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தியும் நல்ல கதைய அம்சம் உள்ள படங்கள் தொடர்ந்து அவருக்கு அமையாததால் இன்னும் ஒரு பெரிய வெற்றிக்காக அவர் ஒரு சினிமா வாரிசாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில் நடிகர் அதர்வா நடிகைகள் கயாடு லோஹர் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் இதயம் முரளி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
மேலும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை அவரே டைரக்ட் செய்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமும் இதுதான். ஆனால் இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனினும் 1990களில் இதயம் படம் நடிகர் முரளி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். அந்தப் படத்தின் ஒரு நினைவாக தான் அவரது மகன் அதர்வா நடித்த இதயம் முரளி படம் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் அதர்வா புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூரு பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இந்த படத்துக்கு இன்னும் கதாநாயகி கமிட் செய்யப்படவில்லை
நடிகர் அதர்வா, அவரது அப்பாவாக நடிக்கும் நடிகர் பிரபுதேவா மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கும் காட்சிகள் மட்டுமே இங்கு எடுக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு கதாநாயகி கமிட் செய்யப்படாத நிலையில் கதாநாயகி இல்லாத காட்சிகளை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படம் பிடித்து வருகிறார். மிக விரைவில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க போகும் கதாநாயகி யார் என்பது தெரியவரும் அல்லது கதாநாயகி இல்லாத ஒரு கேரக்டரில் அதர்வா நடிக்கிறாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.





