தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. பிறகு அவரை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். நடிகர் சூரிக்கு விடுதலை படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தது. தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் நடிகர் சூரி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து நடிகர் சூரி கருடன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மாமன் என்ற படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த நிலையில், அந்த படமும் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக் காளி என்ற படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்தார்.
கொட்டுக்காளி படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற போதிலும் அந்த படம் வசூல் ரீதியாக கமர்ஷியலாக பெரிய கவனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார்.
இந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஆகஸ்ட் 13ம் தேதி நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் செப்டம்பர் 3ம் தேதக்கு மண்டாடி படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்றதால் செப்டம்பர் 10ம் தேதிக்கு மண்டாடி படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சிங்கிளாக வந்தால் அதிக தியேட்டர்களில் நிறைய லாபம் அள்ளலாம் என்பது மண்டாடி படக் குழுவினரின் திட்டமாக உள்ளது.
ஆனால் இப்போது செப்டம்பர் 10ம் தேதி மண்டாடி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் அதே நாளில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படமும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 3 படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்போது மண்டாடி சர்தார் 2 டிமாண்டி காலனி 3 என மூன்று படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் நிலையில் நடிகர் சூரியின் படம் மற்ற 2 படங்களை விட பெரிய அளவில் கவனம் பெறுமா? பெரிய வசூலை குவிக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.





