- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரையில் நடந்து வந்த நடிகர் அருண் விஜய் படம் ஷூட்டிங் திடீர் நிறுத்தம், சென்னைக்கு திரும்பிய...

மதுரையில் நடந்து வந்த நடிகர் அருண் விஜய் படம் ஷூட்டிங் திடீர் நிறுத்தம், சென்னைக்கு திரும்பிய படக்குழு – பஞ்சாயத்து பேசி சரி செய்வாங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் முத்தையா. குட்டிபுலி கொம்பன் மருது கொடிவீரன் தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி விருமன் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என்கிற காதர் பாட்ஷா ராம்போ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இதில் புலிகுத்தி பாண்டி விருமன் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் படுதோல்வி படங்களாக இருந்தன.

இந்நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கிய அந்த சில படங்கள் சரியாக போகாத நிலையில் அவரது மகனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை அவர் டைரக்ட் செய்தார். அந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையிலும் இன்னும் அந்த படம் திரைக்கு வராமல் உள்ளது.

- Advertisement -

இதையடுத்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குனர் முத்தையா டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த நடிகை மிருணாள் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் முத்தையாவுக்கும் படத்தின் தயாரிப்பாளர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதனால் சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக ஒரு கட்டத்தில் மிகவும் விரக்தி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் சூட்டிங்கை கேன்சல் செய்து விடுமாறு கூறிவிட்டார்.

- Advertisement -

அதனால் படப்பிடிப்பை அப்படியே பாதியில் நிறுத்தி விட்டு படக்குழுவினர் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டனர். அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா? தயாரிப்பாளரும் இயக்குனரும் சமாதானம் ஆவார்களா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. அருண் விஜய் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் படம் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஏறக்குறைய முடிகிற தருவாயில் உள்ளது. அதனால் விரைவில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் பஞ்சாயத்து பேசி இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து படத்தை திரைக்கு கொண்டு வருவார்களா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்