நடிகர் விஜய் நடித்த ஜனநாயகம் படம் வரும் 23ம் தேதி ரிலீசாக உள்ளது. முன்னதாக நாளை 19ம் தேதி முதல் ஜனநாயகன் படம் பார்ப்பதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் துவங்க உள்ளது. வழக்கம்போல விஜய் நடித்த இந்த படமும் முதல் நாள் புக்கிங்கில் சாதனை படைக்குமா? முந்தைய விஜய் படங்களைப் போலவே விஜய் நடித்த இந்த படத்துக்கும் ரசிகர்களின் அமோக ஆதரவை டிக்கெட் முன்பதிவிலேயே வெளிப்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை தவிர கூடுதலாக அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனநாயகன் படத்துக்கு 18 வயதுக்கு உட்பட்ட யாரும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடாது. அப்படி செய்துவிட்டு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தே ஆக வேண்டும் என்று பிரச்சனை செய்தால் அவர்களது முன்பதிவு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது என்று ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஆன்லைனில் ஜனநாயகன் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் எப்போதுமே அதிக கட்டணத்தில் டிக்கெட் விலை இருப்பது வழக்கம். அந்த தியேட்டரின் உரிமையாளர் இப்போது தவெக எம்எல்ஏ என்றும் கூறப்படுகிறது.
அந்த குறிப்பிட்ட தியேட்டரில் ஒருவேளை அதிக விலைக்கு டிக்கெட் கட்டணம் விற்கப்பட்டால் அதையே மற்ற தியேட்டர்காரர்களும் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளனர். ஏனென்றால் அவர் தவெக கட்சியை சார்ந்தவர் என்பதால் அவரே அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் மற்ற தியேட்டர்காரர்களும் அதிக கட்டணம் வசூலிக்க ஆலோசனையில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இன்றி கார்ப்பரேட் தியேட்டர்கள் சிலவற்றில் காம்போ ரேட் என்று விலையில் 750 ரூபாய் வரை ஒரு டிக்கெட் என்று விற்க திட்டமிட்டுள்ளதாகவும் அதில் 110 ரூபாய் ஜனநாயகன் பாப்பதற்கான டிக்கெட் என்றும் மீதி பணத்துக்கு பாப்கார்ன் கோக் பப்ஸ் என கேண்டீன் ஸ்னாக்ஸ் கொடுக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் படத்துக்கு அதிக கட்டணம் வசூல் என்றாலும் அதற்கு ஏற்றதாக காம்போவில் தின்பண்டங்கள் தருவதால் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது குழப்பமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.





