தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப் படம் கொடுத்து விட்டாலே அவர்களது ஆட்டம் கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். இப்போது ஒரு படம் நன்றாக ஓடிவிட்டாலே சம்பளத்தை பல கோடி ரூபாய் உயர்த்தி விடும் சில இளம் நடிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் பயங்கர அட்ராசிட்டி செய்து இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை கதறடித்து விடுகி்னறனர்.
ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு மாறுபட்ட ஒரு இளம் நடிகராக தமிழ் சினிமாவில் நல்ல கலைஞராக இருந்து வருபவர் ஹரீஷ் கல்யாண். பொறியாளன் என்ற படத்தில் நடித்த ஹரீஷ் கல்யாண் பிறகு இன்னும் சில படங்களில் நடித்தார். எல்ஜிஎம் கசட தபற தாராள பிரபு பியார் பிரேமா காதல் தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்தார்.
இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக நடிகர் ஹரீஷ் கல்யாண் கலந்துக்கொண்டார். படங்களில் நடித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அவர் வரவேற்பை பெற முடியவில்லை. ஒரு இளம் நடிகராக மட்டுமே தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
ஆனால் திடீரென சுக்கிர திசை அடித்தது போல் ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. இந்த படத்துக்கு இப்போது 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படமும் ஹரீஷ் கல்யாணுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
ஆனால் பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து என்ற 2 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஹரீஷ் கல்யாணுக்கு அவர் நடித்த 3 படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. இவ்வளவு பெரிய வெற்றிகளை கொடுத்தும் தனது அடுத்த படங்கள் ரிலீஸாகாமல் பல மாதங்களாக தாமதம் நீடித்து வருவது அவருக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இது விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் டீசல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதே போல் தாசமக்கான் என்ற படத்திலும் அடுத்ததாக 100 கோடி வானவில் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த 3 படங்களுமே இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் நடக்காததால் இந்த படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. நல்ல நடிகராக வெற்றிப் படங்களை கொடுத்த ஹரீஷ் கல்யாண் படங்கள் முடங்கி இருப்பது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.





