- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரியை தொடர்ந்து நடிகர் சூர்யா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை… சமீபத்தில் கூட போட்டோ ஷூட்...

சூரியை தொடர்ந்து நடிகர் சூர்யா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை… சமீபத்தில் கூட போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாவ் சொல்ல வெச்சிருந்தாங்களே…?

- Advertisement -

ஒரு நடிகர் அல்லது நடிகை அவர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை காட்டிலும் சிறந்த கேரக்டரும் நல்ல கதையம்சமும் கொண்ட படங்கள் என ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் கூட ரசிகர்கள் மனதில் அவர்கள் பெரிய இடத்தை பிடித்துவிட முடியும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுவிட முடியும். இதற்கு சிறந்த உதாரணமாக நடிகை பவானி ஸ்ரீயை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் சகோதரிதான் நடிகை பவானி ஸ்ரீ என்பது பலரும் அறியாத விஷயம். க/பெ ரணசிங்கம் பாவ கதைகள் ஆகிய படங்களில் நடித்த பவானி ஸ்ரீ இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நாயகனாக அறிமுகமான விடுதலை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெரிய வரவேற்பையும் பெற்றார்.

- Advertisement -

தொடர்ந்து விடுதலை 2 படத்திலும் பவானி ஸ்ரீ நடித்திருந்தார். ஆனால் விடுதலை முதல் பாகம் அளவுக்கு அவருக்கு இந்த 2ம் பாகத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. தவிர இந்த விடுதலை 2 படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை, தொடர்ந்து நண்பன் ஒருவன் வந்த பிறகு, காளிதாஸ் 2 ஆகிய படங்களில் பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு நடிகை பவானிஸ்ரீ யின் புகைப்பட ஆல்பம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இது விடுதலை படத்தில் நடித்த பவானி ஸ்ரீதானா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு விதவிதமான போஸ்களில் பவானி ஸ்ரீ போட்டோஸ் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், பவானி ஸ்ரீ நடிக்கும் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

ரெட்ரோ மற்றும் கருப்பு படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்து வருகிறார். இவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரமேலு பட நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் சூர்யா 46 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை பவானி ஸ்ரீ நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார் ரவீணா தாண்டன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் பவானிஸ்ரீ 2வது நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்