- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுசை வைத்து நான் அடுத்ததாக இயக்கப் போகும் திரைப்படம் இப்படித்தான் இருக்கும்... முதல்முறையாக மனம் திறந்த...

தனுசை வைத்து நான் அடுத்ததாக இயக்கப் போகும் திரைப்படம் இப்படித்தான் இருக்கும்… முதல்முறையாக மனம் திறந்த லப்பர் பந்து இயக்குனர்…

- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காவியம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இயக்குனர் அருண்ராஜ் காமராஜிடம் உதவியாளராக இருந்தவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா திரைப்படம் உருவானபோது அதில் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

இப்படியான சூழலில் தான் அவருக்கு லப்பர் பந்து திரைப்படம், இயக்குனராகும் அந்தஸ்தை கொடுத்தது. கிரிக்கெட் விளையாட்டை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதை மட்டுமே காட்டாமல், உறவுகளுக்குள் இருக்கும் உன்னதத்தை மிகச் சிறப்பாக கூறியிருந்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்தனர்.

- Advertisement -

மிக முக்கியமாக மலையாள நடிகை சுவாசிகாவை நாம் கூறலாம். யசோதை கதாபாத்திரத்தில் படம் முழுக்க, மிரட்டி இருப்பார் சுவாசிகா. இதேபோல் அட்டகத்தி தினேஷும் படத்தில் அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவரை பலரும் கெத்து தினேஷ் என்றே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஒட்டி போனது.

மாமனார் மருமகனுக்கு இடையேயான மோதல், காதலர்களுக்கு இடையே நடக்கும் போராட்டம், கணவன் மனைவிக்கு நடுவே இருக்கும் காதல் என அத்தனையும் ஒருசேர கொடுத்து அசத்தி இருந்தார் தமிழரசன் பச்சமுத்து. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பல கோடிகளைக் குவித்து பாராட்டுகளைப் பெற்றது. இப்படியான சூழலில் தமிழரசன் பச்சமுத்துவின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில்தான் அவர் அடுத்ததாக தனுசுடன் இணைய போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அப்படி என்றால் அது என்ன விதமான ஜானராக இருக்கும் என்று பலரும், யூகித்து வந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியின் மூலம் அது குறித்து மனம் திறந்து இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. அதில், தனுஷ் சாருக்கு என்றே இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை நான் எழுதி இருக்கின்றேன்.

அவரது இமேஜை எடுத்துச் செல்லும் வகையில் இந்த படத்தின் கதை இருக்கும். ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகுஜன மக்களுக்கும் இந்த படத்தின் கதை பிடிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் ஸ்கிரிப்ட்டை பார்க்கும்பொழுது இது லப்பர் பந்தை விட நன்றாக வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷ் தற்போது போர் தொழில் இயக்குனருடன் படம் நடித்து வரும் நிலையில், விரைவில் அவர் தமிழரசன் பச்சமுத்து உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்