- Advertisement -
Homeபொழுதுபோக்குலஞ்சம் வாங்கறவங்களை தண்டிக்கலாம், படம் பார்க்க வந்த எங்களை ஏய்யா இப்படி தண்டிக்கறீங்க? - ரசிகர்களை...

லஞ்சம் வாங்கறவங்களை தண்டிக்கலாம், படம் பார்க்க வந்த எங்களை ஏய்யா இப்படி தண்டிக்கறீங்க? – ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் 2 தாத்தா

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. அதாவது முதல் பாகமாக வந்த படம் மிகப்பெரிய வெற்றியையும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெறும் பட்சத்தில், அதே படம் இரண்டாவது பாகமாக வெளிவரும் பட்சத்தில், மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதுதான் அந்த சென்டிமென்ட். இதில் அத்தி பூத்தது போல் ஏதேனும் ஓரிரு படங்கள் இரண்டாம் பாகமும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் தமிழ் சினிமா வரலாற்றைப் பொறுத்தவரை எந்த 2ம் பாகம் படத்தை எடுத்துப் பார்த்தாலும், இரண்டாம் பாகம் என்பது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்த படமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்தியன் 2 படமும், 28 ஆண்டு முன் வெளிவந்த மாஸ் ஹிட் இந்தியன் படத்தின் பெயரைக் கெடுக்கும் விதமான ஒரு படமாக இருப்பதாகவே படம் பார்த்த ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் வருகிற ஒவ்வொரு காட்சியும், பிளாஷ்பேக் காட்சியும், அவர் பேசுகின்ற வசனமும் ரசிகர்களை பல விதங்களில் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல. படத்தின் கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள் என ஒவ்வொரு விஷயங்களிலும், மிக நேர்த்தியான, தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளாக, அந்த கதையில் உருவாக்கப்பட்டு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக மிக ரசித்து ரசிகர்களை பார்க்க வைத்தது.

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள், பின்னணி இசை, சுஜாதாவின் கூர்மையான வசனங்கள், கமல்ஹாசனின் நடிப்பு என இந்தியன் படம் எல்லா விதங்களிலும், சிறந்த தகுதிகள் வாய்ந்த தரமான ஒரு கிளாசிக்கல் படமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்த, தந்துள்ள ஒரு படமாக உள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், படம் முழுவதும் வசனம் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒருவேளை பிக்பாஸ் மேடை போல, இந்தியன் 2 படப்பிடிப்பில் கேமரா நிற்கும் போதும் நினைத்துக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் நிறைகளை காட்டிலும் குறைகளையே அதிகளவில் சுட்டிக் காட்ட வேண்டிய அளவுக்கு படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருகின்றன. இந்த படத்தில் பார்வையாளர்களாகிய ரசிகர்கள், படத்தோடு தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும் விதமாக எந்தவிதமான விஷயங்களுமே இல்லை.

படத்தில் எல்லா விஷயங்களையும் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத் தனங்களுடன் இருப்பது, ரசிகர்களை கடுப்படைய செய்கிறது. வர்மக்கலை என்ற பெயரில் கமல் செய்யும் சேட்டைகளும், அடிக்கடி மேக்கப் மாற்றிக் கொண்டு கமல் வருவதை சர்க்கஸ் கோமாளி போல இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, ரகுல் பிரீத்தி சிங் எதற்காக நடித்தார்கள் என்றே தெரியவில்லை. படத்தின் நீளம், மூன்று மணி நேரம் அதுவும் கிளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதால் ரசிகர்களுக்கு கொட்டாவியாக வருகிறது. இறுதியில் வரும் இந்தியன் 3 டிரெய்லரும் எந்தவித உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு தரவில்லை. உண்மையில் தாத்தா ரசிகர்களை கதறவிட்டு விட்டார்.

சற்று முன்