- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகனுக்கு பதிலா அந்த புதுப்பையன் நடிக்கட்டும் என்று சொன்னதே அவர்தானே? அஜீத்குமார் நன்றி மறக்கலாமா?...

என் மகனுக்கு பதிலா அந்த புதுப்பையன் நடிக்கட்டும் என்று சொன்னதே அவர்தானே? அஜீத்குமார் நன்றி மறக்கலாமா? – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தனது சினிமா வாழ்க்கையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நான் யாருடைய சிபாரிசும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் வந்து ஜெயித்தவன் என்றும் என் ரசிகர்களை என்னுடைய சுய நலத்துக்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியதாவது, நடிகர் அஜீத்குமார் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என்னுடைய ரசிகர்களை என் சுயநலத்துக்கு பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இது நடிகர் விஜயை தாக்குவது போல் உள்ளது. ஏனென்றால் அவர் ரசிகர் மன்றங்களை தான் இப்போது கட்சி இயக்கமாக மாற்றி அரசியலுகு்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் 35 ஆண்டுகள் என்று கொண்டாடலாம். ஆனால் அஜீத்குமார் 33 ஆண்டுகளை ஏன் கொண்டாடுகிறார், அறிக்கை விடுகிறார் எனத் தெரியவில்லை. இந்த அறிக்கையில் அஜீத்குமாரிடம் சுயபெருமை அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. என் வளர்ச்சிக்கு நானே காரணம், எந்த பின்னணியும் இல்லாமல் நான் வந்தேன் என்று அவர் சொல்வதை ஏற்க முடியாது.

ஒரு நடிகருக்கு முதல் படம்தான் மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்தான். அதற்கு என்ன காரணம் என்பது இன்று வரை தெரியவில்லை. அஜீத்குமார் நடித்த பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே எஸ்பி பிதான் என பல பேட்டிகளில் அவரே சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

அடுத்தது அமராவதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குனர் செல்வா வேறு ஒரு இளைஞரை செலக்ட் செய்துவிட்டார். அப்போது அந்த இயக்குனரை ஏதேச்சையாக சந்தித்த பாடகர் எஸ்பிபி, அவரிடம் அஜீத்குமார் என்ற அழகான பையன் இருக்கார். தமிழ் பையன்தான். இந்த கேரக்டரில் அவரை நடிக்க வையுங்க என்று இயக்குனரிடம் அழுத்தமாகவே வலியுறுத்தி இருக்கிறார்.

அப்படிதான் அமராவதி படத்தில் அஜீத்குமார் நடித்தார். அடுத்து இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை படத்தில் நாயகனாக நடிக்க இருந்தது எஸ்பிபி மகன் சரண்தான். அப்போது பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், என் பையன் வேண்டாம். அவன் இப்போதான் கல்யாணம் பண்ணியிருக்கான். அவன் நடிக்க மாட்டான். என் மகனுக்கு பதிலா அந்த புதுப்பையன் அஜீத்குமாரை நடிக்க வையுங்க என்றும் இயக்குனர் வசந்திடம் சிபாரிசு செய்திருக்கிறார். இப்படி எஸ்பிபி செய்த உதவிகளை மறந்துவிட்டு அஜீத்குமார் நானே தான் சுய முயற்சியால் வந்தேன் என்று சொல்வதை ஏத்துக்க முடியாது என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்