- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி 2… இந்த படத்தில் எல்யுசிவில் யாரெல்லாம் வரப்போறாங்க? -...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி 2… இந்த படத்தில் எல்யுசிவில் யாரெல்லாம் வரப்போறாங்க? – அவரே சொன்ன அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் இல்லாமல், குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நேரடியாக தமிழ் சினிமா களத்தில் இயக்குனராக இறங்கி பெரிய வெற்றியை கண்டவர்.

மாநகரம் படத்தில் துவங்கி கைதி மாஸ்டர் விக்ரம் லியோ என அடுத்தடுத்த மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர். விமர்சன ரீதியாக தோல்வியடைந்த லியோ படம் கூட வசூல் ரீதியாக பெரிய வெற்றிப் படமாக தான் இருந்தது. இப்போது லோகேஷின் இயக்கத்தில் கூலி படம் உருவாகி வருகிற 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கூலி படத்தில் அமீர்கான் உபேந்திரா சௌபின் சாகிர் நாகர்ஜூனா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் தயாராகி வருகிறார். அவர் இயக்கிய படங்களில் கைதி படம் 57 இரவுகளில் உருவான ஒரு படமாகும். கதாநாயகி இல்லாத படமாகவும் இருந்தது. சமீபத்தில் கைதி 2 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சில முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்சியு குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, எல்சியு வை மையப்படுத்தி படம் எடுப்பதால் ஏற்கனவே உள்ள இன்னொரு படத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்கள் இந்த படத்தில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறந்து போன நடிகர்கள் மீண்டும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்சியுவில் இன்னொரு படத்தில் குரூப் டான்ஸ் ஆடியவர்கள், சண்டை காட்சிகளில் நடித்தவர்கள் கூட புதிதாக எல்சியுவில் எடுக்கப்படும் படங்களில் இடம்பெறாமல் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்