- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சிவகார்த்திகேயன்... உண்மை நிலவரம் என்ன...

என்னது… கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சிவகார்த்திகேயன்… உண்மை நிலவரம் என்ன…

- Advertisement -

கூலி திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இதன் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.

அது மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், டிக்கெட் விற்பனை சூடு பிடித்திருக்கிறது. தலைநகர் சென்னையை பொறுத்த வரை முதல் நாள் டிக்கெட் கிடைக்கவே இல்லை என்பதுதான் பலரது பதிலாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சுமாராக இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் என்கிற பிம்பம் படத்தை தாங்கி நிற்பதால் அதன் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.

- Advertisement -

படத்தில் தேவா எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வருகிறார். இதுபோக, பாலிவுட் நடிகர் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இந்த திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருந்தார் ரஜினிகாந்த். அதில் “லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதையை கூறுவதற்கு முன்பே நான் ஒரு கமல் ரசிகன் என்று தெரிவித்து விட்டார். நான் இதை அவரிடம் கேட்டேனா. முதல் நாள் காட்சி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. நான் ஒரு பிணத்திற்கு மாலை போடும் காட்சி. யாராவது முதல் காட்சியிலேயே இப்படி வைப்பார்களா” என்று பேசி கலகல பூட்டினார்.

- Advertisement -

இப்படியான சூழலில் கூலி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் வருவதாக ஒரு தகவல் தீயாக பரவியது. அவருக்கு சத்யா எனும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பலர் பேசினார்கள். மற்றொரு தரப்பினர் அவர் அமீர் கானுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பதாக சொன்னார்கள். இது குறித்து கோலிவுட்டில் விசாரித்தபோது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது கூலி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இல்லை என்பது உறுதிதானாம். இந்த திரைப்படத்திற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் ஒரு கதை கூறியிருக்கிறார். அதில் ரஜினிகாந்துக்கு முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரமாம். சயின்டிபிக் தொடர்பான அந்த கதையில்தான், சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பெரிய பட்ஜெட் என்பதால் லோகேஷ் அந்தத் திட்டத்தை கைவிட, தற்போது சூடாக உருவாகி இருக்கிறது கூலி திரைப்படம்.

- Advertisement -

சற்று முன்