- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு…அந்த ஒரு ஏக்கம் இன்னும் இருக்கிறதா? -...

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு…அந்த ஒரு ஏக்கம் இன்னும் இருக்கிறதா? – இனியாவது தலைவரோட ஏக்கத்தை யாராவது தீருங்கப்பா!

- Advertisement -

ரசிகர்களின் சந்தோஷமான கைதட்டல்தான் கலைஞர்களுக்கு கிடைக்கும் உண்மையான பெரிய விருது என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அடிக்கடி சொல்வார். ஆனால் மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடிப்பை பாராட்டி படைப்பை பாராட்டி தரும் விருதுகளும் பரிசுகளும் ஒரு சிறந்த அங்கீகாரம் என்பதையும் மறுக்க முடியாது.

இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் 3 முறை மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றிருக்கிறார். அதே போல் கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் என 6 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அதே போல் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 7 முறை இதுவரை சிறந்த இசையமைப்பாளர் என தேசிய விருது பெற்றிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் அறிவித்த 71வது தேசிய விருது பட்டியலில் பார்க்கிங் படத்தில் நடித்த நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருதும், உள்ளொழுக்கு படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வாத்தி படத்துக்கு இசையமைத்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகமானவர் சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த். இந்த 2025ம் ஆண்டில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா ஆண்டில் 171 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நேற்று வெளியான அவரது 171வது படம் கூலி திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு இதுவரை ஒருமுறை மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகிப் பால்கே விருது கிடைத்து விட்டது. பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளும் கிடைத்து விட்டன.

ஏராளமான பிலிம்பேர் விருதுகள் மாநில அரசின் விருதுகள் நந்தி விருது என பல விருதுகளை பெற்ற போதிலும், 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இதுவரை ஒரு படத்தில் கூட சிறந்த நடிகர் தேசிய விருது இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை கமர்ஷியல் என்ற பெயரில் பில்டப் நாயகனாக நடித்த அவருக்கு தேசிய விருது தர எந்த மத்திய அரசும் நேர்மையாக முன்வரவில்லை. அதனால் இனியாவது ஒரு நல்ல இயக்குனர் ரஜினிக்கு தேசிய விருது தரும் ஒரு நல்ல தரமான படத்தை இயக்க முன்வந்து சூப்பர் ஸ்டாரின் ஏக்கத்தை போக்க வேண்டும்.

- Advertisement -

சற்று முன்