நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன் பயணத்தை துவங்கி இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடித்த சில படங்களை அவரே சொந்தமாகவும் தயாரித்து இருக்கிறார். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் காமெடி செய்து கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவில் நடிக்க அழைத்து வந்தது நடிகர் சிம்புதான்.
நடிகர் சிம்பு தான் நடிகர் சந்தானத்துக்கு தனது மன்மதன் வல்லவன் ஒஸ்தி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பிறகு மற்ற ஹீரோக்களின் படங்களிலும் காமெடி செய்து நடிகர் சந்தானம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பிறகு முன்னணி காமெடி நடிகராக மாறினார்.
நடிகர் சந்தானம் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் ரஜினி விஜய் அஜீத் போல காமெடி செய்துக் கொண்டு இருந்தவர். அவர் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு தன்னுடன் அப்போது நடித்த மாறன் மனோகர் சுவாமிநாதன் சேஷூ போன்ற சிலரையும் நடிக்க வைத்தார்.
அந்த வகையில் நடிகர் லொள்ளு சபா மனோகர், நடிகர் சந்தானம் நடித்த படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் ஏ1 தில்லுக்கு துட்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் லொள்ளு சபா மனோகர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் ஏ1 படத்தில் நடித்த போது தனக்கு கேட்ட சம்பளம் தராமல் சந்தானம் ஏமாற்றி விட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் லொள்ளு சபா மனோகர் கூறியதாவது, ஏ1 படத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு நாள் சம்பளமாக வெறும் 6000 ரூபாய் தான் கொடுத்தார்கள். நண்பன் என்ற உரிமையிலேயே உன்னிடம் நான் அடிச்சு பேச முடியலே. பார்த்து கொஞ்சம் கூடுதலா கொடு என்று சந்தானத்திடம் நேரடியாகவே கேட்டேன்.
ஆனால் அதற்கெல்லாம் எந்த மதிப்பும் கொடுக்காமல் 6000 ரூபாய் தான் சம்பளம் என்று சொல்லி என் கையில் பணத்தை கொடுத்துவிட்டு சந்தானம் போய்விட்டார் என்று ஏ1 படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் லொள்ளு சபா மனோகர் வேதனை தெரிவித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





