- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லனாக மிரட்டிய மலையாள நடிகர் சௌபின் சாஹிர்… அவரை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் -...

வில்லனாக மிரட்டிய மலையாள நடிகர் சௌபின் சாஹிர்… அவரை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் வெளியான கூலி படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கதை திரைக்கதை இல்லாமல் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகளுடன் திரைக்கு வந்துள்ள இந்த படத்தை ரஜினி ரசிகர்களே கடுமையாக விமர்சிக்கின்றனர். குறிப்பாக லோகேஷ் கனகராஜூக்கு இப்படி ஒரு படம் தேவையா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் கூலி படத்தை பொருத்த வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருப்பவர் படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்ல. அந்த படத்தில் தயாளன் என்ற கேரக்டரில் ஹார்பரில் வில்லனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சௌபின் சாஹிர்தான். இவர்தான் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கூலி படத்தை பொருத்த வரை நாகர்ஜூனா உபேந்திரா அமீர்கான் சத்யராஜ் என பல நடிகர்கள் இருந்தும் அவர்களை எல்லாம் விட நடிப்பில் தனிமுத்திரை பதித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருப்பவர் சௌபின் சாஹிர்தான். பல காட்சிகளில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாசில். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபு என்பவரின் மகன்தான் சௌபின் சாஹிர். பாபு பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் செளபின் சாஹிர் நடித்தாலும் உதவி இயக்குனராக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

- Advertisement -

பிறகு அவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். குறிப்பாக பிரேமம் படத்தில் சௌபின் சாஹிர் நடித்த பிடி மாஸ்டர் வேடம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அடுத்து சார்லி மகேசிண்டே பிரதிகாரம் கும்பளங்கி நைட்ஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தை தயாரித்த அவர் குட்டன் என்ற ரோலில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது.

அதன் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சௌபின் சாஹிர் நன்கு பரிச்சயமானவராக மாறினார். தமிழ்நாட்டில் நடந்த கல்லூரி நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில அமைப்புகள் அவருக்கு விருதுகள் வழங்கிய பாராட்டியது. அந்த வகையில் தான் கூலி படத்தில் சௌபின் சாஹிர் நடிக்க கமிட் ஆனார். இப்போது கூலி படத்தில் வில்லனாக மட்டுமின்றி, மோனிகா பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் தனியிடத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இனி தமிழில் அவரை நிறைய படங்களில் பார்க்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்