கோவையை சேர்ந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் கலையில் சிறந்த நிபுணராக மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் விஐபிகள் தொழிலதிபர்கள் இல்லங்களில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் என்பது மிகவும் பிரசித்தமாக உள்ளது.
அதுமட்டுமின்றி சினிமாவிலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்திருக்கிறார். மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த அவர் பெண்குவின் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஸ்ருதி கோவையில் வக்கீலாக இருக்கிறார். இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டிலா என்பவர், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டார் என்றும் 6 மாதங்கள் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் சில வாரங்களுக்கு முன்பு மாலையும் கழுத்துமாக இருவரும் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் எந்த கருத்தும் விளக்கமும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது அவரை விவாகரத்து செய்யாமல் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டது சட்டப்படி குற்றம் என்று இணையத்தில் ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால் இதற்கு எந்தவித பதிலும் மாதம்பட்டி ரங்கராஜூம் அவரது முதல் மனைவி ஸ்ருதியும் கூறவில்லை.
இந்த பிரச்னைக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது வலைதள பக்கத்தில் இருந்த ஜாய் கிறிஸ்டிலாவை அன் பாலோவும் செய்திருந்தார். அதனால் மாதம்பட்டி ரங்கராஜ் தனது 2வது மனைவியை கழட்டி விட்டு விட்டார் என்ற ஒரு தகவலும் வேகமாக பரவியது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜூடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் குறிப்பாக இருவரும் உதட்டில் முத்தமிடும் காட்சிகளை கொண்ட ஒரு வீடியோவை ஜாய் கிறிஸ்டிலா இப்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எனக்காக பிறந்தாயே எனதழகி என்ற பாடல் பேக்ரவுண்ட் மியூசிக் ஆக உள்ளது. தனது கணவர் ரங்கராஜ் என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை ஜாய் கிறிஸ்டிலா வெளியிட்டுள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்களது கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.





