- Advertisement -
Homeபொழுதுபோக்குபிச்சைக்காரருடன் ஏற்பட்ட நட்பு, கோவிலுக்குள் இயக்குனர் பாலா செய்த துணிகர காரியம், வேற லெவல் பண்ணிருக்காரே

பிச்சைக்காரருடன் ஏற்பட்ட நட்பு, கோவிலுக்குள் இயக்குனர் பாலா செய்த துணிகர காரியம், வேற லெவல் பண்ணிருக்காரே

- Advertisement -

இயக்குனர் பாலா தமிழ்  சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனர்களில் ஒருவர். சமூகத்தில் கீழ்மட்ட நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கையை  படம்பிடித்துக் காட்டுவதில் பாலா வல்லவர். “பிதாமகன்”, “நான் கடவுள்”, “பரதேசி”, “தாரை தப்பட்டை” போன்ற திரைப்படங்களை  இதற்கு உதாரணமாக  கூறலாம்.

பாலாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு கறாரான ஆள் போலவும், தனது திரைப்படத்தில் நடிப்பவர்களை அடித்து வேலை வாங்கும் படு பயங்கரமான ஸ்ட்ரிக்ட்டான இயக்குனர் போலவும் தெரிவார். ஆனால் அவருக்கு இன்னொரு பக்கம் ஒன்று இருக்கிறது. அகோரிகள், பிச்சைக்காரர்கள், பிணம் எரிப்பவர்கள் போன்ற சமூகத்தில் கவனிக்கப்படாத பல ஆட்களை சந்தித்து அவர்களுடன் நெருக்கமாக பழகுவாராம். அவ்வாறு ஒரு பிச்சைக்காரரிடம் அவர் நட்பாக பழகிய ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

பாலாவிற்கு இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதசுவாமி கோவில் வாசலில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர் ஒருவர் நண்பராக இருக்கிறாராம். பாலா எப்போதெல்லாம்  இராமேஸ்வரம் போகிறாரோ அப்போதெல்லாம் அந்த பிச்சைக்காரரை தனது அறைக்கு அழைத்து வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசுவாராம்.

ஒரு முறை அந்த பிச்சைக்காரரை தனது நண்பர்களிடம் சொல்லி நன்றாக குளிக்கவைத்து அவருக்கு வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, துண்டு ஆகியவற்றை உடுத்தி இராமேஸ்வரம் கோவிலுக்குள் அழைத்துப்போனாராம். முதலில் அந்த பிச்சைக்கார நண்பர் “நான் கோவிலுக்கு வெளியே பிச்சை எடுப்பவன். என்னை கோவிலுக்குள்ளேயே விடமாட்டார்கள். ஆதலால் நான் வரவில்லை” என்று முரண்டு பிடித்தாராம். ஆனால் பாலா அவரை லேசில் விடவில்லையாம். அவர் நினைத்தபடியே ஆடைகளை உடுத்தி கோவிலுக்குள்ளே அழைத்துப்போய்விட்டாரம்.

- Advertisement -

பாலா ஒரு செலப்ரிட்டி என்பதால் அவருக்கு அந்த கோவில் பூசாரிகளிடம் நல்ல வரவேற்பு இருக்குமாம். தலையில் பரிவட்டம் எல்லாம் கட்டுவார்களாம். அந்த முறை பிச்சைக்காரரை அழைத்துச் சென்றபோது பூசாரிகள் பாலாவுக்கு பரிவட்டம் கட்ட முயன்றபோது,  பாலா அதனை தடுத்து, “இந்த முறை எனக்கு வேண்டாம், இவருக்கு கட்டுங்கள்” என்று கூறினாராம்.

பிச்சைக்காரரை கோவிலுக்குள் அழைத்து வந்ததையே சகித்துக்கொள்ளாமல் பார்த்த பூசாரிகள், பிச்சைக்காரருக்கு பரிவட்டம் கட்டச் சொல்கிறாரே என்று யோசித்தார்களாம். எனினும் பாலா வற்புறுத்த பூசாரிகள் அந்த பிச்சைக்காரருக்கு பரிவட்டம் கட்டினார்களாம். இந்த தகவலை பகிர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “பாலாவுக்குள் ஆயிரம் பெரியார் இருந்திருக்கிறார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்