கடந்த 1987ம் ஆண்டில் வெளியான படம் மிஸ்டர் பாரத். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருந்தார் சத்யராஜ். இந்த படத்துக்கு பின் 37 ஆண்டுகளாக ரஜினி சத்யராஜ் இணைந்து நடிக்கவில்லை. கூலி படத்தில் சத்யராஜ் நடித்த போது 37 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்ததே ஒரு பேசுபொருளாக மாறியிருந்தது. ஆனால் கூலி படத்தில் சத்யராஜ் நடித்தது ஒரு டம்மி கேரக்டர் என்பது படம் பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும்.
ஆனால் கூலி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டார். சிவாஜி படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேசப்பட்டது. எனக்கு இணையாக அவருக்கு சம்பளம் தருவதாக கூறியும் அந்த படத்தில் என்னுடன் இணைந்து நடிக்க மறுத்து விட்டார் என்று வெளிப்படையாக கூறினார்.
ஆனால் உண்மையில் நடந்த கதை இதுதான். சிவாஜி படத்தை இயக்கிய ஷங்கர், சத்யராஜிடம் சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிக்குமாறு நேரில் சென்று பேசியிருக்கிறார். அப்போது சத்யராஜ், நான் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்கிறேன், என்னுடைய அடுத்த படத்தில் எனக்கு வில்லனாக ரஜினி நடிப்பாரா என்றுதான் கோயம்புத்தூர் குசும்பை காட்டியிருக்கிறார்.
நடிகர் சத்யராஜின் இந்த எகத்தாளமான பேச்சை கேட்டு வாயடைத்துப் போன இயக்குனர் ஷங்கர், அதன்பிறகுதான் தெலுங்கு நடிகர் சுமனை சிவாஜி படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க செய்திருந்தார். அப்படிப்பட்ட சத்யராஜ், கூலி படத்தில் மட்டும் நடிக்க ஓகே சொன்னது ஏன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அதாவது கூலி இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் சொன்னது போல், ரஜினியுடன் 7 படங்களில் வில்லனாக நடித்து விட்டேன். அதனால் கூலி படத்தில் நண்பனாக நடிக்க சம்மதித்தேன் என்று கூறியது உண்மையல்ல. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் இது நமக்கு நிறைய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்பதுதான் உண்மையான நோக்கமாக இருக்கிறது.
மேலும் மிஸ்டர் பாரத் படத்தில், சத்யராஜ் நடித்த பல காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன. அது தானாக நடந்த ஒரு விஷயம். ஆனால் இது படத்தின் நாயகன் ரஜினிகாந்த் சொல்லி நடந்திருக்கிறது. தன்னுடைய படத்தில் சத்யராஜ் பெரிய அளவில் வரவேற்பை பெறக் கூடாது என ரஜினி செய்த சூழ்ச்சி என்று தவறாக கருதியதால்தான், இத்தனை ஆண்டுகளாக ரஜினியிடம் மோதல் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறார் சத்யராஜ் என்ற உண்மையும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.





