- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி 2 படம் உருவாக இப்போதைக்கு வாய்ப்பில்லை, அந்த பிளானையே கிடப்பில் போட்ட இயக்குனர் லோகேஜ்...

கைதி 2 படம் உருவாக இப்போதைக்கு வாய்ப்பில்லை, அந்த பிளானையே கிடப்பில் போட்ட இயக்குனர் லோகேஜ் கனகராஜ் – கைதி 2 படம் வருமா… வராதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக மாநகரம் படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில் அவர் இயக்கிய 2வது படம் கார்த்தி. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். கதாநாயகி பாடல்கள் இல்லாத இந்த படம் மாஸ்ஹிட் படமாக இருந்தது.

கைதி படம் ஒரு நாளில் இரவு முழுவதும் நடக்கும் சம்பவங்களை கொண்ட கதைக்களத்தில் உருவாகி இருந்தது. இந்த படம் 57 இரவுகள் மற்றும் ஒரு அரைநாள் பகலில் எடுக்கப்பட்ட ஒரு படமாகவும் இருந்தது. கைதி படம்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு மிகப்பெரிய அடையாளத்தை வெற்றியை பெற்றுத் தந்தது. அதன்பிறகுதான் கமல் நடிப்பில் விக்ரம் படத்தை அவர் இயக்கினார்.

- Advertisement -

அதனால் கைதி 2 படம் உருவாகும் என்று அப்போதே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். ஆனால் விக்ரம் மாஸ்டர் லியோ கூலி என அடுத்தடுத்த லைன் அப்களில் அவர் பிஸியான நிலையில், கைதி 2 படம் உருவாவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. கூலி படத்துக்கு பிறகு இப்போது கைதி 2 படம் ஷூட்டிங் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கூலி மற்றும் அதற்கு முந்தைய படமான லியோ ஆகிய படங்களுக்கு கிடைத்த விமர்சனங்களால் கைதி 2 படம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது சம்பளத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 75 கோடியாக உயர்த்தி இருக்கிறார். கைதி 2 படத்தின் பட்ஜெட்டும் ரூ. 190 கோடி வரை எகிறியுள்ளது.

- Advertisement -

மேலும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் லோகேஜ் கனகராஜூக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையே கார்த்தியும் மார்ஷல் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

மாநகரம் கைதி படங்களை இயக்கிய அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு 3 படங்கள் இயக்கி தருவது என்றும் அதில் 3வது படமாக கைதி 2 படம் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கமிட் ஆனது உண்மைதான். ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் எல்லாம் செய்துக்கொள்ளவில்லை. ஒரு நிறுவனத்துக்கு 3 படங்கள் செய்வது என்பது ஒரு வாய்மொழி உறுதிமொழிதான். அதனால் கைதி 2 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதால் அந்த பிளானையே லோகேஷ் கனகராஜ் கிடப்பில் போட்டுவிட்டு மற்ற பணிகளில் இப்போது ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்