- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்தானத்திற்கு இருக்கும் ஈகோ, சிவகார்த்திகேயன் மேல இப்படி காண்டா?- புட்டு புட்டு வைத்த மூத்த பிரபலம்

சந்தானத்திற்கு இருக்கும் ஈகோ, சிவகார்த்திகேயன் மேல இப்படி காண்டா?- புட்டு புட்டு வைத்த மூத்த பிரபலம்

- Advertisement -

சந்தானம் எப்படி விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தாரோ அதே போல்தான் சிவகார்த்திகேயனும் நுழைந்தார். இருவருமே விஜய் தொலைக்காட்சியில் காமெடிக்கு பெயர் போனவர்களாக இருந்தார்கள். ஒரு பக்கம் “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் சந்தானம் கலக்கி வர, மற்றொரு பக்கம், சிவகார்த்திகேயன் “கலக்கப்போவது யாரு”, “அது இது எது” ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ரசிக்க வைத்தார்.

ஆனால் சந்தானத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சந்தானம் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியபோது அவர் காமெடியனாக இருந்தார். அதன் பின் காமெடி திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். சில திரைப்படங்களில் சீரீயஸான கதாபாத்திரங்களில் சந்தானம் நடித்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ரசிகர்கள் சந்தானத்திடம் அவரது பாணியிலான கவுண்ட்டர் காமெடிகளையே எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

ஆனால் சிவகார்த்திகேயன் தொடக்கத்தில் இருந்தே ஹீரோவாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரது திரைப்படங்களில் காதல், சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என எல்லாமே ஒர்க்கவுட் ஆகியது. அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் ஒரே பாணியிலான திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், “வேலைக்காரன்”, “ஹீரோ”, “டாக்டர்”, “மாவீரன்” என வித்தியாசமான கதைகளத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சந்தானத்திடம் ஒரு ஈகோ இருக்கிறது. அதனை தூக்கி அவர் வெளியே எறியவேண்டும். விஜய் டிவியில் இருந்துதான் சிவகார்த்திகேயனும் வந்தார், அவரும் விஜய் டிவியில் இருந்துதான் வந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் பெரிய உயரத்திற்கு போய்விட்டார், அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என்று சொல்கிறார்களே, தன்னை ஏன் சொல்லமாட்டிக்கிறார்கள் என்ற வயித்தெரிச்சலில்தான் சந்தானம் காமெடி டிராக்கில் இருந்து சற்று விலகினார்.

- Advertisement -

நானும் ஹீரோவாக நடிக்கிறேன் பேர்வழி என்று தனது சொந்த காசை போட்டு படமெடுத்து கடனாளி ஆகிவிட்டார். அதன் பிறகுதான் ஓரளவு ஞானம் வந்தது. ஆனால் இப்போதும் சந்தானத்திற்கு கொஞ்சம் ஈகோ இருக்கிறது. அதை தூக்கிப்போட்டால் அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது” என்று கூறியுள்ளார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படம் சந்தானத்திற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்