- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் ஏமாற்றினாலும் தளபதி இருக்காரே… தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பிக்கை - ஆனா அதுக்கும் 2...

தலைவர் ஏமாற்றினாலும் தளபதி இருக்காரே… தமிழ் சினிமா ரசிகர்கள் நம்பிக்கை – ஆனா அதுக்கும் 2 பேர் இடைஞ்சலா வர்றாங்களே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி கூலி படம் வெளியானது. 50வது ஆண்டில் வெளியாகும் தலைவர் படம், அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு அனிருத் இசை என பல சிறப்பு அம்சங்கள் இருப்பதால் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்தனர்.

அது மட்டுமின்றி தமிழில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் கன்னடத்தில் உபேந்திரா மற்றும் ரக்சிதா ராம் தெலுங்கில் நாகர்ஜூனா மலையாளத்தில் சௌபிர் சாஹிர் இந்தியில் அமீர்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் இருப்பதால் வேற லெவல் படமாக கூலி அட்டகாசம் செய்யும் என்றே ரசிகர்கள் ஆசையாக காத்திருந்தனர்.

- Advertisement -

கார்த்தி நடித்த கைதி கமல் நடித்த விக்ரம் படங்களில் ரசிகர்களை அசத்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தலைவர் சூப்பர் ஸ்டாரை வைத்து தரமான சம்பவத்தை செய்திருப்பார், நிச்சயமாக இது ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருந்து ரசிகர்களை உற்சாகத்தில் திக்குமுக்காட செய்துவிடும் என்றும் ஒரு பேராசை ரசிகர்களிடம் இருந்தது. கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்று நாகர்ஜூனாவும் பில்டப் செய்து கூறியிருந்தார்.

ஆனால் கடைசியில் கடந்த 14ம் தேதி கூலி படம் ரிலீஸாகி முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரஜினி ரசிகர்களே, ஆள விடுங்கடா சாமி இது ரஜினி படமும் இல்லே, லோகேஷ் கனகராஜ் படமும் இல்லே, காட்டு மொக்கை படம். இதுக்கா இவ்வளவு பில்டப் பண்ணினீங்க என்று கேட்காத குறையாத தியேட்டர்களை விட்டு வெளியேறி சென்றனர். மனசாட்சி உள்ள ரஜினி ரசிகனே இந்த படத்தை ரசிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

எப்படியும் தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த படமாக தலைவர் நடித்த கூலி படம் இருக்கும் என ஆசைப்பட்ட ரசிகர்கள், இப்போது 500 கோடி வசூலை தாண்டவே திண்டாடிக் கொண்டிருக்கும் கூலி படத்தால் நொந்து போயிருக்கின்றனர். இந்த நேரத்தில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளப் போவது விஜய் நடித்த ஜனநாயகன் படம்தான் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தலைவர் நம்மை ஏமாற்றினாலும் தளபதி விஜய் இருக்கிறார். நிச்சயமாக ஜனநாயகன் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்வது உறுதி என்று நம்பிக்கையாக பேசி வருகின்றனர். ஆனால் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் வெளியாகும் அதே நாட்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி, சூர்யா நடித்த கருப்பு ஆகிய படங்களும் வெளிவர இருப்பதால் இந்த வசூல் சாதனையில் கண்டிப்பாக இடையூறு ஏற்படும் என்றும் ரசிகர்கள் ஆதங்கமாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்