- Advertisement -
Homeபொழுதுபோக்கு34 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த கேப்டன் பிரபாகரன்… 3 நாட்களில் மொத்த வசூல் நிலவரம்...

34 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்த கேப்டன் பிரபாகரன்… 3 நாட்களில் மொத்த வசூல் நிலவரம் – விஜயகாந்த் பிறந்த நாளில் ரசிகர்கள் ஆனந்தம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் விஜயகாந்த். கடந்த 1980 90களில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக 1991ம் ஆண்டில் வெளியான அவரது 100வது படம் கேப்டன் பிரபாகரன். 300 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படம் அந்த காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது. இந்த படத்தை ஆர்கே செல்வமணி டைரக்ட் செய்திருந்தார்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் மனைவியாக ரூபிணி நடித்திருந்தார். மேலும் சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் லிவிங்ஸ்டன் பீலிசிவம் காந்திமதி என பலர் நடித்திருந்தனர். சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையப்படுத்திய இந்த படத்தில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகான் அறிமுக வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

- Advertisement -

இன்று கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினம் என்பதை முன்னிட்டு கடந்த 22ம் தேதியன்று கேப்டன் பிரபாகரன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 3 நாட்களாகவே கேப்டன் பிரபாகரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. விஜயகாந்த் பிறந்த நாளான இன்று கேப்டன் பிரபாகரன் படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

விஜயகாந்த் தனது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடியவர். அதனால் இன்று அவரது பிறந்த நாளில் தேமுதிகவினர் சார்பில் பல இடங்களில் அன்னதானம் இனிப்பு வழங்கல், நோட்டு புத்தகங்கள் வழங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முன்னாள் தலைவர் விஜயகாந்த் படத்துக்கு சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

விஜயகாந்தை பொருத்த வரை நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர். குறிப்பாக தன்னை நாடி உதவி என்று வருபவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். அதனால் அவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் பலர் அழைத்ததுண்டு. அரசியலில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட அவர், முதலமைச்சராக வருவார் என எதிர்பார்த்த நிலையில் உடல்நல பாதிப்பால் மறைந்தது தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி வெளியான கேப்டன் பிரபாகரன் 3 நாட்களில் வசூலித்த மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 1.25 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்திருக்கிறது. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை அதிகரித்து வருவதால் இந்த வாரத்தில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்