- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தில் ஒன்றல்ல இரண்டு கதாநாயகிகளா... அது யார் யாரெல்லாம் தெரியுமா?...

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தில் ஒன்றல்ல இரண்டு கதாநாயகிகளா… அது யார் யாரெல்லாம் தெரியுமா?…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். கூலி திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, எழுந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கும், முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதற்கும் லோகேஷ் கனகராஜுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கூறலாம். ஆனால் துரதிஷ்டவசமாக கூலி திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும், வசூலில் கூலி திரைப்படம் எந்த ஒரு ஏமாற்றத்தையும் கொடுக்கவில்லை. வெறும் நான்கு நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது வரை கூலி திரைப்படம் 550 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியது. அந்த சாதனையை கூலி திரைப்படம் படைக்க தவறிவிட்டது. இப்படியான சூழலில் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

அவர் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையே எடுக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அவரும் பேட்டிகளில் இதனையே கூறியிருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் செய்கிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்தது போல் அல்லாமல் ஒரு முழு நீள திரைப்படத்தில் ஹீரோவாக அவர் வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

ஆக்சன் கதைக்களத்தில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்காக தாய்லாந்து சென்று தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார் அருண் மாதேஸ்வரன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிருணா மேனன் இதில் வருகிறார். அது போக கூலி திரைப்படத்தில் கலக்கிய ரக்ஷிதா ராம், அருண் மாதேஸ்வரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்