தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. குறிப்பாக பாகுபலி ருத்ரமாதேவி அருந்ததீ வேட்டைக்காரன் சிங்கம் லிங்கா அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் அனுஷ்கா நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். இதில் பாகுபலி படத்தின் 2 பாகங்களிலும் தேவசேனை கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தார்.
தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் உடல் பருமனான கேரக்டரில் அனுஷ்கா நடித்த போது அதற்காக உடல் எடையை அதிகரித்தார். பிறகு அவரது உடல் எடை குறையாமல் குண்டான தோற்றத்துக்கு மாறிவிட்டார். டயட் உடற்பயிற்சி யோகா என பலமுயற்சிகளை செய்தும் அவரது உடல் எடை குறையவில்லை.
அதனால் ஆண்ட்டி தோற்றத்தில் இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது காதி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிகை அனுஷ்கா நடித்திருக்கிறார். உடல் எடையை குறைத்த நிலையில் பழைய தோற்றத்தில் இந்த படத்தில் அனுஷ்கா காணப்படுகிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற 5ம் தேதி காதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் பணிகளில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் படத்தின் இயக்குனர் கிரீஷ் ஆகியோர் தீவிரமாக இருந்து வருகின்றனர். ஆனால் நடிகை அனுஷ்கா பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.
இதுகுறித்து காதி படத்தின் இயக்குனர் கிரீஷ் கூறியதாவது, காதி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் முற்றிலும் அனுஷ்காவின் தனிப்பட்ட விஷயம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவரது அற்புதமான நடிப்பே படத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
ஷீலாவதியாக அனுஷ்கா தனது மிகச் சிறந்த நடிப்பை படத்தில் வழங்கியுள்ளார் என்று இயக்குனர் கிரீஷ் கூறியிருக்கிறார். வருகிற 5ம் தேதி தெலுங்கு படமான காதி தமிழ் டப்பிங்கில் வெளியாக உள்ள நிலையில், தமிழில் மதராஸி பேட் கேர்ள் மற்றும் கேபிஒய் பாலா நடித்த காந்தி கண்ணாடி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





