- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியே அதை நம்பிதான் படம் எடுக்கிறார், ஓபனாக பேசிய நடிகர் ராதாரவி - தலைவரே… இதெல்லாம்...

ரஜினியே அதை நம்பிதான் படம் எடுக்கிறார், ஓபனாக பேசிய நடிகர் ராதாரவி – தலைவரே… இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் ராதாரவி. குறிப்பாக ரஜினி விஜயகாந்த் நடித்த பல படங்களில் வில்லன் கேரக்டரில் ராதாரவி மிரட்டியிருக்கிறார். சில படங்களில் ஹீரோ வேடங்களிலும் ராதாரவி நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும் தனது திறன்பட்ட நடிப்பை அவர் ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.

நடிகர் ராதாரவி இப்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் எந்த கேரக்டரில் நடித்தாலும் அதில் தனது முத்திரையை பதிப்பவர். குறிப்பாக சர்கார் மற்றும் தொடரி போன்ற படங்களில் அரசியல்வாதியாக அவரது நடிப்பு அசத்தலாக இருந்தது. ராதாரவி நடிப்பில் மட்டுமல்ல, பேசுவதிலும் மிக துணிச்சலானவர்.

- Advertisement -

இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் லிங்கா மற்றும் சரத்ரவி ஆகியோர் நடிக்கும் படம் தாவுத். இந்த படத்தில் நடிகர் ராதாரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படம் குறித்து நடிகர் ராதாரவி பேசியதாவது, கால் மூட்டு ஆபரேஷன் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு இரண்டு ஆண்டுகள் வீட்டிலிருந்தேன். இப்போது அதில் இருந்து மீண்டு விட்டேன்.

சினிமாக்காரன் காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும். இல்லை என்றால் அவரை காணவில்லை என்பார்கள். ஒரு காலத்தில் எல்லாம் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுவார்கள். இப்போது மாறிவிட்டேன். நேரடியாக வில்லத்தனம் செய்வதில்லை. ஆர்டர் போடுகிற இடத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஒரு பாடல் வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு தான் வைத்தார்கள். இப்போது பாடலே வருகிறது. தமிழை கொன்று விடாதீர்கள்.

- Advertisement -

இப்போது தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறது. ரஜினிகாந்தே ரத்தத்தை நம்பித்தான் படம் எடுக்கிறார். நாம எல்லாம் சாதாரணமான ஆள். ஆரம்பம் முதலே ரத்தத்தை காண்பிக்கலாம். நிறைய படங்கள் வந்தாலும் அதெல்லாம் தியேட்டரில் ஓட வேண்டும். ஓடிடியில் பார்க்கலாம் என்று மக்கள் இருந்து விடக்கூடாது. தியேட்டருக்கு வந்து படம் பாருங்க என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படத்தில் படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தன. அதனால் அந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியதால் 18 வயதுக்குட்பட்ட யாரும் படம் பார்க்க முடியவில்லை. பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வராததால் வசூலும் கணிசமாக குறைந்தது. அதனால் கூலி போன்ற வன்முறை படங்களில் ரஜினி நடிப்பதால் ரத்தத்தை நம்பிதான் ரஜினியே இருக்கிறார் என்று சீனியர் நடிகர் ராதாரவி விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்