- Advertisement -
Homeபொழுதுபோக்குசிங்கத்தை சிங்கிளா வர விடமாட்டாங்க போல இருக்கே? ரஜினிக்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர்...

சிங்கத்தை சிங்கிளா வர விடமாட்டாங்க போல இருக்கே? ரஜினிக்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர் – மேட்ச்ல யாரு ஜெயிப்பாங்கன்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கு பிறகு, அந்த படம் தந்த மாபெரும் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி, படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக கலந்துக்கொண்டு இருக்கிறார். குறி வெச்சா இரை விழணும் என்ற அவரது டயலாக் டிரண்ட் ஆகி பேசப்படுகிறது.

இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், நெல்சன் என 3 இயக்குநர்களின் படங்கள் வரிசையாக இருக்கின்றன. அதனால் வரும் 2025 இறுதி வரை ரஜினிகாந்த் தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

இதற்கிடையே ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சில காட்சிகளில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதியே லால் சலாம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. அதன்பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது பிப்ரவரி 9் தேதி உறுதியாக ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா, என போக போகத்தான் தெரியும்.

- Advertisement -

லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார். அதனால், மகள் இயக்கிய படம் என்பதால், படம் முழுக்க வரும்படியாக நடித்துக் கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அதுமட்டுமின்றி கேரளாவில் ஜெயிலர் படத்தை போலவே, இந்த படமும் ரூ. 4 கோடி விற்பனையாகி உள்ளது.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் சில காட்சிகள் அழிந்துபோனதால், ரிசூட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான செலவு என தயாரிப்பு நிறுவனம் கேட்ட போது என் சம்பளத்தில் கழித்துக்கொள்ளுங்கள் என மகளுக்காக கூறியிருக்கிறார் ரஜினி. வரும் பிப்ரவரி 9 அன்று லால் சலாம் ரிலீஸ் ஆகும் அதே நாளில், ஜெயம் ரவி நடித்த சைரன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லால் சலாமுக்கு, சைரன் போட்டியாக இருக்குமா என பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்