- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகர் சல்மான்கான் நடத்திய மான் வேட்டை - சம்பவத்தை மையப்படுத்தி உருவான படத்தை ரிலீஸ்...

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடத்திய மான் வேட்டை – சம்பவத்தை மையப்படுத்தி உருவான படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கலா?

- Advertisement -

பாலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். கடந்த 1998ம் ஆண்டு ஹம்சாத் சாத் ஹெயின் என்ற இந்தி படத்தில் சல்மான்கான் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் நடந்த போது வனப்பகுதிக்குள் 2 அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடிய குற்றத்திற்காக அவர் மீது போலீஸ் வழக்கு தொடரப்பட்டது.

அதன் பிறகு இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த நடிகர் சைப் அலிகான் நடிகைகள் தபு நீலம் சோனாலி பிந்த்ரே மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நடிகர் நடிகைகள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

- Advertisement -

கோர்ட்டில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நடிகர் சல்மான்கான் மேல்முறையீடு செய்தார். அது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே சில தீவிரவாத அமைப்புகள் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது. தொடர்ந்து அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதுதவிர நடிகர் சல்மான்கான் தனியாக தனக்கென செக்யூரிட்டி ஃபோர்ஸ் மூலமாகவும் பாதுகாப்பு வளையத்தில் எப்போதும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சல்மான் கானின் மான் வேட்டையும் அதற்கு பின்பு நடந்த போலீஸ் நடவடிக்கைகள், வழக்குகள் இவற்றை மையமாக வைத்து காலா ஹிரன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது.

- Advertisement -

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. காலா ஹிரன் படம் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் அமித் ஜானி கூறியதாவது, யாருக்கும் ஆதரவாகவோ அல்லது புண்படுத்தும் நோக்கத்திலோ இந்த படம் எடுக்கப்படவில்லை. இது பல ஆண்டுகளாக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க வழக்கின் உண்மையான பக்கங்களை மக்களுக்கு காட்டும் ஒரு முயற்சி.

அந்த நோக்கத்தில் மட்டுமே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமிதத் ஜானி கூறினார். மான் வேட்டை தொடர்பான வழக்கு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தை நாட நடிகர் சல்மான்கான் தரப்பு ஏற்பாடு செய்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்