- Advertisement -
Homeபொழுதுபோக்குமகேஷ் பாபு - ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இத்தனை பாகங்களில் வெளியாகிறதா... படத்தின் பட்ஜெட்...

மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இத்தனை பாகங்களில் வெளியாகிறதா… படத்தின் பட்ஜெட் தொகையை கேட்டாலே தலை சுற்றுகிறதே…

- Advertisement -

இந்திய சினிமா அளவில் பிரமாண்ட இயக்குனர் என்னும் பெயரை எடுத்தவர் ராஜமவுலி. அவரது திரையுலக காலகட்டத்தை மகதீராக்கு முன்பு மகதீராவிற்கு பின்பு என்றே வரையறுக்கலாம். சிரஞ்சீவி மகன் ராம்சரண், கதாநாயகனாக அறிமுகமான மகதீரா திரைப்படம் வாகை சூடியது. தெலுங்கு மொழியில் மட்டும் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் மாவீரன் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு சக்சஸ் ஆனது.

இதனைத் தொடர்ந்து ராஜமௌலியின் திரையுலக பயணம் படு உச்சத்திற்கு சென்றது. நான் ஈ எனும் திரைப்படத்தை உடனடியாக கொடுத்து பலரையும் அசர வைத்தார். ஒரு ஈ வில்லனை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. கேட்கும்போதே பலருக்கும் இது குறித்து ஆர்வத்தை தூண்ட, அதனை மிகச் சரியாக எடுத்து பாராட்டைப் பெற்றார் ராஜமவுலி.

- Advertisement -

படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பை ஏற்படுத்தாத வகையிலும், ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அந்த திரைப்படத்தை கையாண்டிருந்தார் ராஜமவுலி. இதனை தொடர்ந்துதான் அவரது இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இந்திய சினிமாவிலேயே மைல்கல் பதித்த திரைப்படம் பாகுபலிதான் என அடித்துக் கூறலாம்.

பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு என இரு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண பழி வாங்கும் கதையை, விறுவிறுப்பாக எடுத்து திரைக்கதையில் வேகம் கூட்டி சபாஷ் போட வைத்திருந்தார் ராஜமௌலி. இதனைத் தொடர்ந்து, ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கினார் ராஜமௌலி. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடித்திருந்தனர்.

- Advertisement -

பாகுபலி என்னும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து இதில் தடுமாறி விடுவாரோ என்று பலரும் நினைக்க அதை எல்லாம் தவிடு பொடியாக்கி, ஆர் ஆர் ஆர் படத்தை சக்சஸ்ஃபுல் ஆக்கினார் ராஜமவுலி. அதுமட்டுமல்ல இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் படக்குழு பெற்றது. இப்படியான சூழலில் தற்போது மகேஷ்பாபு உடன் கைகோர்த்து இருக்கிறார் இயக்குனர்.

மிகப் பிரமாண்டமான முறையில் இதிகாசத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் கதாநாயகியாக, பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிரிதிவிராஜுக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. வனப்பகுதியிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்