- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தி கண்ணாடி படத்துக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவமும் நடந்ததா? கேபிஒய் பாலா நிஜத்துலயே ஹீரோதான்...

காந்தி கண்ணாடி படத்துக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவமும் நடந்ததா? கேபிஒய் பாலா நிஜத்துலயே ஹீரோதான் என பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் அவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். காமெடியான அவரது பேச்சும் டைமிங் பஞ்ச் டயலாக்கும் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தன.

ஆனால் அதன்பிறகு தனது உதவும் குணத்தால் கேபிஒய் பாலா மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு கேபிஒய் பாலா தேடி தேடிப்போய் உதவினார். சத்தியமங்கலம் மலைகிராம மக்களுக்காக 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார். மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு வீடு தேடிச் சென்று பண உதவி செய்தார். நிவாரண பொருட்களை வழங்கினார்.

- Advertisement -

தொடர்ந்து பல விதங்களில் மக்களுக்கு உதவி வரும் கேபிஒய் பாலா, தனது சொந்த வருமானத்தில் பெரும்பகுதியை மக்களுக்கு செலவிடுவதே லட்சியமாக கொண்டிருக்கிறார். இப்போது சென்னை பல்லாவரத்தில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்டி வரும் கேபிஒய் பாலா, 1 ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்த கேபிஒய் பாலா, இப்போது ஷெரீப் இயக்கத்தில் உருவான காந்தி கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வருகிற 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தேசிய விருது நடிகை அர்ச்சனா கணவன் மனைவியாக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் காந்தி கண்ணாடி படத்தில் நடிக்க, அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், படத்தின் கதாநாயகன் கேபிஒய் பாலாவுக்கு அட்வான்ஸ் மட்டுமே தந்துள்ளது. இதுவரை சம்பளம் தரவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற 5ம் தேதி அதாவது நாளை மறுதினம் படமே ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் கேபிஒய் பாலாவும் சம்பளம் கேட்கவில்லை. அந்த தயாரிப்பு நிறுவனமும் சம்பளத்தை தர இதுவரை முன்வரவில்லை.

இதுகுறித்து நடிகர் கேபிஒய் பாலாவிடம் சிலர் கேட்ட போது, என்னை நம்பி பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கின்றனர். என்னை ஹீரோவாக்கி படம் எடுக்கும் அவர்களிடம் நான் எப்படி போய் சம்பளம் கேட்க முடியும்? அவர்களுக்கு மேலும் அதிக பாரத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதால் கேட்கவில்லை. படம் வெற்றி பெற்றால் நிச்சயமாக எனக்கான சம்பளத்தை அவர்கள் தந்து விடுவார்கள். அந்த நம்பிக்கை உள்ளது என்று யதார்த்தமாக கேபிஒய் பாலா கூறியிருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்