தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர்கே செல்வமணி. கடந்த 1990ம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை என்ற படத்தின் மூலம் ஆர்கே செல்வமணி தமிழ் சினிமாவில் இயக்குனரானார்.
தொடர்ந்து செம்பருத்தி கேப்டன் பிரபாகரன் மக்கள் ஆட்சி உளவுத்துறை ராஜமுத்திரை அடிமைச்சங்கிலி பொட்டு அம்மன் அதிரடிப்படை அரசியல் என பல வெற்றிப் படங்களை கொடுத்தனர் ஆர் கே செல்வமணி. இவர் செம்பருத்தி படத்தில் நடிகை ரோஜாவை அறிமுகம் செய்து வைத்தார். இப்போது பெப்சி அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
ஆர்கே செல்வமணி இயக்கிய பல படங்களில் ரோஜா நாயகியாக நடித்தபோது அவருக்கும் ஆர்கே செல்வமணிக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திடீரென அரசியலுக்கு தாவிய ரோஜா, ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் ரோஜா எம்எல்ஏவாக அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990ம் ஆண்டு காலகட்டத்தில் ஹீரோ வில்லனாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். தற்போது அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் ஆர்கே செல்வமணி, நடிகர் ஆனந்தராஜ் பங்கேற்றனர் அப்போது மேடையில் ஆர்கே செல்வமணி பேசியதாவது, நானும் ஆனந்தராஜூம் ஒன்றாக பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தோம்.
அப்போதே ஆனந்தராஜ் பெரிய பண்ணையார் போல ஜிப்பா எல்லாம் அணிந்துக் கொண்டு மேலே ஒரு துண்டை போட்டுக்கொண்டு ஜமீன்தார் போல தான் வருவார். அப்போது எங்களை யாருமே மதிக்கவில்லை. ஆனந்தராஜை யாரும் அங்கு நடிப்பதற்கு கூப்பிடவில்லை. நானும் இயக்குனராவேன் என்று யாரும் நினைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் நாங்கள் மிகப்பெரிய உயரத்தை அடைந்ததற்கு காரணம் அந்த அவமானங்கள்தான் என்று ஆர்கே செல்வமணி நடிகர் ஆனந்தராஜ் அருகில் நின்றபோது இந்த விஷயத்தை மேடையில் பேசினார். அதே போல் ஆர்கே செல்வமணி இயக்கிய படங்களில் ஆனந்தராஜ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





